| மாநில வாலிபால் போட்டி Dinamalar
மாநில வாலிபால் போட்டி
Advertisement
 

பதிவு செய்த நாள்

15 மே
2019
23:40

சென்னை: மாநில அளவிலான வாலிபால் போட்டியில், சென்னையைச் சேர்ந்த நான்கு அணிகள் பங்கேற்றுள்ளன.கோவை, பெரிய நாயக்கன் பாளையம்,ஸ்ரீ வெங்கடகிருஷ்ணன் உள் விளையாட்டு அரங்கில், மாநில அளவிலான ஓபன் வாலிபால் போட்டி, நேற்று மாலை துவங்கியது. இப்போட்டி, ஆண்கள் பிரிவில் மட்டும் நடக்கிறது.இதில், சென்னையைச் சேர்ந்த, எஸ்.ஆர்.எம்., பல்கலை, இந்தியன் வங்கி, கஸ்டம்ஸ், தமிழக போலீஸ் மற்றும் கோவையைச் சேர்ந்த, அக்வா பம்ப் ஸ்போர்ட்ஸ் கிளப் ஆகிய அணிகள் பங்கேற்றுள்ளன.ஐந்து நாட்களுக்கு நடக்கும் இப்போட்டி, 19ம் தேதி நிறைவு பெறுகிறது. வெற்றி பெறும் அணிகளுக்கு, கோப்பை மற்றும்பரிசுகள் வழங்கப்பட உள்ளன.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X