தள்ளாடும் தகர பாலத்தில் சடையங்குப்பம் மக்கள்... 'சடுகுடு!' 60 ஆண்டு கால மக்கள் பிரச்னைக்கு தீர்வு எப்போது?
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 மே
2019
01:53

மணலி மண்டலத்தில் உள்ள, நீர்நிலைகளால் சூழப்பட்ட சடையங்குப்பம் கிராமத்தில், நீர்வழித்தடங்களை கடந்து செல்ல பாலம் இல்லாததால், 60 ஆண்டுகளாக மக்கள் தவியாய் தவிக்கின்றனர். தற்காலிக தகர பாலமும் உருக்குலைந்து போயிருப்பதால், தள்ளாடும் அந்த பாலத்தில், மக்கள் சடுகுடு விளையாடும் அவலம் நீடிக்கிறது.



சென்னை மாநகராட்சி, மணலி மண்டலம், 16வது வார்டில், சடையங்குப்பம் என்ற கிராமம் உள்ளது. இங்கு, 1,000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட இப்பகுதியில், தற்போதும், ஏரிக்கரையோரம் விவசாயம், கால்நடை வளர்ப்பு தொழில் நடந்து வருகிறது. சடையங்குப்பம், வடக்கே, கொற்றலை உபரி கால்வாய், தெற்கே, புழல் உபரி கால்வாய், கிழக்கே, புழல் உபரி கால்வாய், கொற்றலை உபரி கால்வாய் இணைப்பு பகுதி, பக்கிங்ஹாம் கால்வாய், ஊருக்குள் சடையங்குப்பம் ஏரி என, இந்த கிராமம், நீர் நிலைகளால் சூழப்பட்ட, ஒரு தீவு போன்ற பகுதி.



மூங்கில் கட்டை:


வெள்ள எச்சரிக்கை விடப்பட்டதும், திருவள்ளூர் மாவட்ட, தெற்கு பகுதியின் ஒட்டு மொத்த பார்வையும், சடையங்குப்பத்தை நோக்கி தான் திரும்பும்.வருவாய் துறை, பேரிடர் மேலாண்மை குழு, படகுகளுடன், அப்பகுதி மக்களை மீட்க ஆயத்தமாகும் காட்சிகளை, ஆண்டுக்கொரு முறை, தவறாமல் காண முடியும்.இப்பகுதி மக்கள், ஊருக்குள் இருந்து, இந்த நீர் நிலைகளை கடந்து வெளியேற, 2010க்கு முன் வரை, புழல் உபரி கால்வாய், பக்கிங்ஹாம் கால்வாயை கடக்கும் வகையில், மூங்கில் கட்டைகளை பயன்படுத்தி அமைக்கப்பட்ட பாலத்தில் பயணித்தனர். இந்த பாலம் வழியாக, ஜோதி நகர் சந்திப்பு, மணலி விரைவு சாலை பகுதிக்கு சென்று வந்தனர். இந்த மூங்கில் பாலம் மூலம், பாதசாரிகள், சைக்கிள் போக்குவரத்து மட்டுமே நடந்தது.



வழக்கு:


அரை நுாற்றாண்டு காலமாக, கட்டை பாலத்தில், ஆபத்தான நிலையில், நீர் நிலைகளை கடந்த மக்கள், மேம்பாலம் வேண்டும் என, கோரிக்கை விடுத்தனர்.அதற்கு தீர்வாக, 2010ல், 16 கோடி ரூபாய் செலவில், மேம்பாலம் கட்டும் பணி துவங்கியது. மின்னல் வேகத்தில் நடந்த மேம்பால பணி, போகப்போக அப்படியே, 'டல்' அடிக்க ஆரம்பித்தது. ஒரு கட்டத்தில், மேம்பால பணி கிடப்பில் போடப்பட்டு விட்டது. சடையங்குப்பம் மேம்பாலம் - ஜோதி நகர் சந்திப்பு வரை, இணைப்பு சாலையில் உள்ள தொழிற்சாலைகளால், நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகளே இதற்கு காரணம்.இதற்கிடையில், நெடுஞ்சாலைத் துறையினர், மேம்பால பணிக்கு இடையூறாக இருந்த, சில தொழிற்சாலை கட்டடங்களை இடித்து தள்ளினர்.இருப்பினும், சில வழக்குகள் நிலுவையில் உள்ளதால், பணிகள் அப்படியே கிடப்பில் உள்ளன.



இரும்பு படிக்கட்டு:


பணிகள் முடியாது என்ற விரக்தியில், மாநகராட்சியிடம், தற்காலிக படிக்கட்டுகளாவது அமைத்து தர, பகுதிமக்கள் கோரினர்.இதையடுத்து, மேம்பாலம் ஊருக்குள் இணையும் பகுதியில், இரும்பு சாய்தளமும், ஜோதி நகர் இணைப்பு சாலை பக்கம், இரும்பு படிக்கட்டுகளும் அமைக்கப்பட்டன.கடந்தாண்டு, அந்த இரும்பு படிக்கட்டுகளும், துருபிடித்து, உதிர ஆரம்பித்தன. சில படிக்கட்டுகளில், துளை ஏற்பட்டு, பாதசாரிகள் கால் இடறி, நீர் நிலைகளில் விழும் அபாயம் நிலவியது. அதைத் தொடர்ந்து, இரும்பு படிக்கட்டுகள் சீரமைக்கப்பட்டன.



தொடரும் விபத்து:


இந்நிலையில், மீண்டும் படிக்கட்டுகள் துருபிடித்து, துளை ஏற்பட்டுள்ளதால், விபத்து ஏற்படுகிறது. தகரம் பெயர்ந்து துாக்கிக் கொண்டு நிற்பதாலும், தெருவிளக்குகள் இல்லாததாலும், இரவில் நடந்து செல்லும் பாதசாரிகள், ரத்த காயத்தை சந்திக்கின்றனர்.சமீபத்தில், சடையங்குப்பத்தை சேர்ந்த, லோகேஸ்வரன் என்ற, ஒன்பதாம் வகுப்பு மாணவன், துருபிடித்து தள்ளாடும் இரும்பு சாய்தளத்தில் இறங்க முயற்சித்த போது, கால் இடறி விழுந்து, கை முறிவு ஏற்பட்டுள்ளது.



அரைகுறை மேம்பாலத்தால், தொடரும் விபத்துகளை தடுக்க, மாநகராட்சி அதிகாரிகள், தற்காலிக இரும்பு சாய்தளம் மற்றும் இரும்பு படிக்கட்டுகள் ஆகியவற்றை புனரமைத்து தர வேண்டும்.போக்குவரத்திற்கு தவியாய் தவிக்கும் சடையங்குப்பம் பகுதி மக்களுக்கு, நிரந்தர தீர்வாக, கிடப்பில் உள்ள மேம்பாலப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X