'திருவிழாவில் தகராறு செய்ததால் முறுக்கு வியாபாரியை கொன்றோம்'
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 மே
2019
08:00

காரிப்பட்டி: திருவிழாவில் தகராறு செய்ததால், முறுக்கு வியாபாரியை கொன்றதாக, நீதிமன்றத்தில் சரணடைந்தவர் வாக்குமூலம் அளித்தார்.


சேலம், வலசையூர் அருகே, காட்டூரைச் சேர்ந்த, முறுக்கு வியாபாரி கணேசன், 32. இவர், கடந்த ஏப்., 5ல், மர்ம நபர்களால் கொல்லப்பட்டார். காரிப்பட்டி போலீசார் விசாரித்தனர். இதுதொடர்பாக, பள்ளப்பட்டி பழனிசாமி, 32, சின்னனூர் முத்து, 27, ஆகியோர், சேலம் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். அவர்களை, காவலில் எடுத்து, போலீசார் விசாரித்தபோது, ரவுடியான, காட்டூர் ஆனந்தன், அயோத்தியாப்பட்டணம், தேவாங்கூர் காலனி கதிர்வேல், மேட்டுப்பட்டி தாதனூர் கோபி, கார்த்தி, பிரபு உள்ளிட்டோருடன் சேர்ந்து கொன்றதாக வாக்குமூலம் அளித்தனர். அவர்களை, தனிப்படை போலீசார் தேடிய நிலையில், கதிர்வேல், 27, சிக்கினார். அவர், கடந்த, 2ல், குள்ளம்பட்டி பிரிவு சாலை, ஆலமரத்துக்காடு பகுதியில், போலீசாரை தாக்கிவிட்டு தப்ப முயன்றபோது, இன்ஸ்பெக்டர் சுப்ரமணியன், துப்பாக்கியால் சுட்டதில் உயிரிழந்தார். இதையடுத்து, கணேசன் கொலை வழக்கில் தேடப்பட்ட ஆனந்தன் மைத்துனர் கார்த்தி, 30, கடந்த, 3ல், நாமக்கல் நீதிமன்றத்தில் சரணடைந்தார். அவரை, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். அவரை, ஒருநாள் காவலில் எடுத்து விசாரிக்க, வாழப்பாடி நீதிமன்றம், இன்ஸ்பெக்டர் சுப்ரமணியனுக்கு அனுமதி வழங்கியது. அதன்படி, நேற்று காலை, 10:00 முதல், மதியம், 12:00 மணி வரை, கார்த்தியிடம் விசாரித்தார். அப்போது, 'காட்டூர் மாரியம்மன் கோவில் திருவிழாவின்போது, கணேசன் தகராறில் ஈடுபட்டார். மற்றொரு நாள், பழனிசாமி வாகனத்தில் மோதிவிட்டு, தகராறில் ஈடுபட்டார். இதனால், கூட்டு சேர்ந்து, உருட்டுக்கட்டையால், அவரை அடித்துக்கொன்று, விபத்தில் இறந்ததுபோல், சாலையில் வீசிவிட்டு சென்றோம்' என, போலீசாரிடம் வாக்குமூலம் அளித்தார்.


 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X