| மாதிரிப்பள்ளியில் சேர்க்க பெற்றோர் ஆர்வம் Dinamalar
மாதிரிப்பள்ளியில் சேர்க்க பெற்றோர் ஆர்வம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

18 மே
2019
08:01

பெ.நா.பாளையம்: பெத்தநாயக்கன்பாளையம், பெரியகிருஷ்ணாபுரம் மாதிரிப்பள்ளியில், தங்கள் மகன், மகள்களை சேர்க்க, பெற்றோர் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதுகுறித்து, அப்பள்ளி தலைமையாசிரியர் வெங்கடேசன் கூறியதாவது: எங்கள் மாதிரிப்பள்ளியில், ஆறு முதல், பிளஸ் 2 வரை, ஆங்கில வழிக்கல்வி கற்பிக்கப்படவுள்ளது. ஒவ்வொரு வகுப்பிலும், 80 பேர் சேர்க்கப்படவுள்ளனர். தனியார் பள்ளிக்கு இணையாக செயல்படுவதோடு, மாநில அரசின் சலுகைகள் வழங்கப்படும். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை, வரும், 25க்குள் வழங்க வேண்டும். பள்ளியில் தங்கள் பிள்ளைகளை சேர்க்க, பெற்றோர் மிகவும் ஆர்வம் காட்டுகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

 

Advertisement
மேலும் சேலம் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X