| வாகனங்களுக்கு உயர் பாதுகாப்பு 'நம்பர் பிளேட்' பொருத்தும் பணி ஆரம்பம் Dinamalar
வாகனங்களுக்கு உயர் பாதுகாப்பு 'நம்பர் பிளேட்' பொருத்தும் பணி ஆரம்பம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

18 மே
2019
09:54

மேட்டூர்: கார், இருசக்கர வாகனங்களுக்கு, சம்பந்தப்பட்ட உற்பத்தி நிறுவனமே, உயர் பாதுகாப்பு நம்பர் பிளேட் பொருத்தும் பணியை தொடங்கியுள்ளது.


இந்தியாவில், 22 கோடி வாகனங்கள் உள்ளன. ஆண்டுதோறும், ஒரு கோடி இருசக்கர வாகனங்கள், கார்கள் விற்கின்றன. உற்பத்தி நிறுவனங்களிலிருந்து, வாகனங்கள் நம்பர் பிளேட் பொருத்தி வெளிவரும். அந்த பிளேட்களில், உரிமையாளர்கள், பல வடிவங்களில் நம்பர்களை எழுதினர். பலர், போலி நம்பர் பிளேட் பொருத்தி, குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டனர். இதனால், மத்திய அரசு, நாடு முழுவதும், வாகனங்களுக்கு உயர் பாதுகாப்பு நம்பர் பிளேட் பொருத்த, நடவடிக்கை எடுத்துள்ளது.


இதுகுறித்து, வட்டார போக்குவரத்து அலுவலக அதிகாரிகள் கூறியதாவது: முதல்கட்டமாக, கடந்த ஏப்., 1 முதல் வாங்கும், கார், இருசக்கர வாகனங்களுக்கு, மோட்டார் வாகன அலுவலகம் மூலம், பதிவெண் வழங்கியதும், சம்பந்தப்பட்ட வாகன உற்பத்தி நிறுவனமே, நம்பர் பிளேட் அச்சிட்டு, டீலர்கள் மூலம் வாகனங்களில் பொருத்தி கொடுத்துவிடும். எனினும், இப்பணியை உற்பத்தி நிறுவனங்கள், நடப்பு மாதத்தில்தான் தொடங்கியுள்ளன. லாரி, பஸ் உள்ளிட்ட வாகனங்களுக்கு, உயர் பாதுகாப்பு நம்பர் பிளேட் பொருத்த, உற்பத்தி நிறுவனங்கள், காலஅவகாசம் கேட்டுள்ளன. புதிதாக விற்பனைக்கு வரும் வாகனங்களுக்கு, உயர்பாதுகாப்பு நம்பர் பிளேட் பொருத்தப்படும் நிலையில், விரைவில், பழைய வாகனங்களுக்கும் பொருத்த, அரசு நடவடிக்கை எடுக்கும். அந்த நம்பரை வைத்து, உரிமையாளர்கள், வாகனங்கள் குறித்த விபரங்களை எளிதாக அறிந்துகொள்ள முடியும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X