| சம்பளத்துக்கு தற்காலிக ஆணை: 8,462 அரசு ஆசிரியர்கள் நிம்மதி Dinamalar
சம்பளத்துக்கு தற்காலிக ஆணை: 8,462 அரசு ஆசிரியர்கள் நிம்மதி
Advertisement
 

பதிவு செய்த நாள்

18 மே
2019
09:54

சேலம்: தமிழகத்தில், 8,462 ஆசிரியர் பணியிடங்களுக்கு, ஏப்ரல் சம்பளம் வழங்க, ஒப்பளிப்பு ஆணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில், அரசு பள்ளிகளில், அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டத்தில் நியமிக்கப்பட்ட, 6,872 பட்டதாரி ஆசிரியர், 1,590 முதுகலை ஆசிரியர்களுக்கு, சம்பளம் வழங்க, ஆண்டுதோறும் ஒப்பளிப்பு ஆணை வழங்கப்பட்டது. கடந்த மார்ச்சுடன், அந்த ஆணை நிறைவடைந்த நிலையில், மீண்டும் புதுப்பித்து வழங்க தாமதம் ஏற்பட்டது. இதனால், கடந்த ஏப்ரல் மாத சம்பளத்தை, இதுவரை ஆசிரியர்கள் பெற முடியவில்லை. ஆசிரியர் சங்கங்கள் மற்றும் ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்த நிலையில், தற்போது, அச்சம்பளத்துக்கு மட்டும், ஒப்பளிப்பு ஆணை வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம், சில நாட்களில், 8,462 ஆசிரியர்களுக்கு, ஏப்ரல் சம்பளம் கிடைக்கும்.

 

Advertisement
மேலும் சேலம் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X