திருவெள்ளறை பெருமாள் கோவிலில் முறைகேடு பக்தர்கள் வேதனை
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 மே
2019
20:43

திருச்சி மாவட்டம், திருவெள்ளறை பெருமாள் கோவிலில், ஆகம விதிகள் மீறல் மட்டுமின்றி, பல்வேறு முறைகேடுகளும் நடந்து வருவதால், பக்தர்கள் வேதனை அடைந்து உள்ளனர்.திருச்சி மாவட்டம், துறையூர் சாலையில், திருவெள்ளறையில், சிபி சக்ரவர்த்தியால் கட்டப்பட்ட, 'ஸ்வேதகிரி' எனப்படும், புண்டரீகாட்ச பெருமாள் கோவில் அமைந்துள்ளது.



குற்றச்சாட்டு


இது, ஸ்ரீரங்கத்தை விட, தொன்மையான தலம் என்பதால், ஆதிவெள்ளறை என்றும் அழைக்கப்படுகிறது.'ஸ்வேத வராகன்' என்ற, வெள்ளைப் பன்றியாக, பெருமாள் இங்கு காட்சி அளித்ததால், வேதபுரிநாதன் என, அழைக்கப்படுவதாக தல புராணம் கூறுகிறது. இக்கோவில், 108 திவ்ய தேசங்களில், ஒன்றாக விளங்குகிறது.அறநிலையத் துறை கட்டுப்பாட்டிலும், ஸ்ரீரங்கம், ரங்கநாத பெருமாள் கோவிலின் உப கோவிலாகவும் உள்ள இந்த கோவிலில், ஆகம விதிகளுக்கு புறம்பாக நடத்தல் உள்ளிட்ட, பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.இது குறித்து, ஆன்மிக நல ஆர்வலர்களான, ஸ்ரீரங்கம் ரங்கராஜன், டி.ஆர்.ரமேஷ் ஆகியோர் கூறியதாவது:திருவெள்ளறை புண்டரீகாட்ச பெருமாள் கோவில், 1,000 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்தது. இதுபோன்ற பொக்கிஷங்களை, பாதுகாக்க வேண்டியது நம் கடமை. கோவில்களில், புனரமைப்பு என்ற பெயரில், அதன் தொன்மையை, அழகை, அறநிலையத் துறையினர் சீர்குலைத்தனர்.

இது தொடர்பாக, வழக்கு தொடரப்பட்டது. இதன் பயனாக, ஆறு பேர் அடங்கிய ஆய்வு குழு அமைக்கப்பட்டு உள்ளது.அதன் அனுமதியின்றி, புனரமைப்பு பணி செய்யக் கூடாது. சில கோவில்களில், ஆய்வு குழு அனுமதி இன்றி, சீரமைப்பு பணிகள் செய்யப்படுகின்றன. அதில், திருவெள்ளறை புண்டரீகாட்ச பெருமாள் கோவிலும் ஒன்று.பக்தர்கள், வடக்கு கோபுர வாசல் வழியாக கோவிலுக்குள் பிரவேசிப்பது, பல நுாறு ஆண்டுகளாக வழக்கத்தில் உள்ளது.


கொள்ளை


புனரமைப்பு என்ற பெயரில், இரு ஆண்டுகளுக்கு முன், அந்த பாதை அடைக்கப்பட்டு, கிழக்கு கோபுர வாசல் வழியாக, பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். வடக்கு கோபுர வாசல் சீரமைப்பு பணி முடிந்த பின்னும், இதுவரை, பாதை திறக்கப்படவில்லை.தற்போது, அந்த வாசல், கோவில் நிர்வாகத்திற்கு நெருக்கமானவர்கள், முக்கிய பிரமுகர்களுக்கு மட்டும் திறக்கப்படுகிறது.மாலை நேரத்தில், கோவில் நிர்வாகத்தினர், கோவில் வளாகத்தில், நாற்காலிகள் போட்டு அமர்ந்து, சிற்றுண்டி அருந்தி அரட்டை அடிக்கின்றனர். இது, பக்தர்களை, முகம் சுளிக்க வைக்கிறது.

ஆய்வுக் குழு அனுமதி இன்றி, கோவிலில் சில இடங்களில் நடந்துள்ள புனரமைப்பு பணியில், விதிமுறைகளுக்கு மாறாக, சில துாண்கள் அமைக்கப்பட்டு உள்ளன.கோவில் உபயதாரர்கள், ஐ.ஐ.டி., இடையில், புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டு உள்ளது. அதில், கோவில் புனரமைப்பின் போது கிடைக்கும் அரிய பொருட்கள், தொழில்நுட்பம் ஆகியவை, அவர்களுக்கு சொந்தம் என்பது உள்ளிட்ட சாராம்சங்கள் அடங்கியுள்ளன.இக்கோவிலுக்கும், அறநிலையத் துறைக்கும் சம்பந்தம் இல்லாத நபர்கள், புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது ஏன் என, தெரியவில்லை. இதுபோன்ற பல முறைகேடுகள் நடந்து வருகின்றன.

பழங்கால முறைகளை, அமைப்புகளை மாற்றி, புனரமைப்பு என்ற பெயரில், சீர்குலைப்பதால் தான், பல கோவில்களின் விலை மதிப்பில்லா பொருட்கள், கொள்ளை போயுள்ளன. எனவே, இது குறித்து, அறநிலையத் துறை ஆணையருக்கு புகார் அனுப்பப்பட்டு உள்ளது. உரிய நடவடிக்கை எடுக்காத பட்சத்தில், கோவிலின் தொன்மையை காப்பாற்ற, நீதிமன்றத்தின் உதவி நாடப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினர். - நமது நிருபர் -

 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (3)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
02-ஜூன்-201904:20:51 IST Report Abuse
J.V. Iyer இதற்க்கு வெள்ளைகாரர்களே பரவாயில்லை. பிற மதங்கள் போல கட்டுப்பாடு வேண்டும். கடவுளை மதிக்காதவர்களுக்கு வோட்டு போட்டு கொண்டாடி இருக்கின்றனர்.
Rate this:
Share this comment
Cancel
Appan - London,யுனைடெட் கிங்டம்
19-மே-201913:58:05 IST Report Abuse
Appan ..கோவிலின் நுழைவு கோபுரம் பாழடைந்து இடியும் நிலையில் உள்ளது..இந்த வழியாக பக்தர்கள் சென்று இடிந்து விபத்து நடந்தால் யார் பதில் சொல்லுவது.? கோவிலின் ஆகம விதிகளோடு பக்தர்களின் safety யும் முக்கியம்..இந்தியாவின் புகழ் பெற்ற ஐ.ஐ.டி சென்னையுடன் இந்த புனரமைப்பு நடைபெறுகிறது, பக்தர்களின் உயிர் காத்தல் முக்கியம். இதனால் தான் கோவிலின் வடக்கு கோபுர வாசல் மூடப்பட்டு பணிகள் நடக்கிறது. இதில் ஈடுபட்டவர்கள் ஐந்து வருடங்களுக்கு மேல் ஆழ்ந்த ஆராய்ச்சி செய்து கட்டுமான பொருட்களை உருவாக்கி உள்ளார்கள்.. தமிழக அரசு ஐந்து லட்சம் கொடுத்தாள் வாழ்நாள் வி.ஐ.பி பாஸ் கொடுக்கிறது..கோவிலுக்கு கொடை கொடுப்பவர்களை மதிக்க வேண்டும். கோவில் பிரகாரத்தில் தேனீர் அருந்துவது போன்ற ஒவ்வாத செயல்களை தவிர்ப்பது நல்லது..
Rate this:
Share this comment
Anandan - chennai,இந்தியா
02-ஜூன்-201903:30:15 IST Report Abuse
Anandanபல கோவில்களில் புனரமைப்பு செய்யும்போது பல காலம்கடந்த ஓவியங்களை வர்ணம் பூசுவது சிலை பகுதிகளை சிதைப்பது என்று நடந்தும் வருகிறது அதை காணும்போது நம் பாரம்பரிய சொத்து பாழாகிறதே என்று மிக வருத்தம் அடைகிறோம்....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X