கூடுதல் தடுப்பணை!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 மே
2019
01:02

உடுமலை : மழைக்காலங்களில் வீணாகும் நீரை சேமிக்கவும், கோடை காலங்களில் ஏற்படும் வறட்சி மற்றும் குடிநீர் தட்டுப்பாட்டுக்கு தீர்வு காணும் வகையில், அமராவதி ஆற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்ட அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.உடுமலை அருகேயுள்ள அமராவதி அணை, 1958ல் கட்டப்பட்டது; நான்கு டி.எம்.சி., கொள்ளளவு கொண்ட அணை, தென்மேற்கு பருவ மழை, வட கிழக்கு பருவ மற்றும் கோடை மழை என, ஆண்டுக்கு, 10 டி.எம்.சி.,நீர் பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டது.



அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகள், மேற்கு தொடர்ச்சி மலையிலுள்ள, 946 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டதாகும்.அமராவதி ஆறு, அணை துவங்கி, 148 கி.மீ., துாரம் பயணம் செய்து, வழியோர கிராமங்களை வளம் கொழிக்கச்செய்து, கரூர் திருமுக்கூடலுாரில் காவிரியுடன் இணைகிறது.அணை மூலம், திருப்பூர், கரூர் மாவட்டங்களிலுள்ள, 54,637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. மேலும், வழியோரத்திலுள்ள, நுாற்றுக்கணக்கான குடிநீர் திட்டங்களுக்கும் ஆதாரமாக உள்ளது.அணை கட்டப்பட்டு, 61 ஆண்டுகளாகியுள்ள நிலையில், 42 முறைக்கு மேல் அணை நிரம்பியுள்ளது. கடந்தாண்டு தென் மேற்கு பருவ மழையின் போது, நான்கு முறை அணை நிரம்பி, 17 டி.எம்.சி., வரை உபரி நீர் வீணாகியது.



தொடர்ந்து, வட கிழக்கு பருவ மழை ஏமாற்றியதால், ஐந்து மாதமாக அணை வறண்டு, ஆற்றிலும் நீர் வரத்து இல்லாமல், வெறும் 'பாலைவனமாக' காணப்படுகிறது.ஆண்டு தோறும் அணை நிரம்பி, உபரியாக நீர் வெளியேற்றப்படும் நிலையில், அவற்றை முறையாக சேமிக்கும் தடுப்பணைகள் இல்லை.148 கி.மீ., துாரம் நீளமுள்ள அமராவதி ஆற்றின் குறுக்கே, மழை காலங்களில் வீணாகும் தண்ணீரை சேமிக்கும் வகையில், தாராபுரம், புதுப்பை, தாளக்கரை என ஆறு இடங்களில் மட்டுமே தடுப்பணைகள் உள்ளன.ஆண்டு தோறும் பல டி.எம்.சி., தண்ணீர் வீணாகும் நிலையில், கூடுதல் தடுப்பணைகள் கட்டினால், வறட்சி காலங்களில், குடிநீர், விவசாயம் மற்றும் நிலத்தடி நீர் மட்ட உயர்வுக்கு பயனுள்ளதாக இருக்கும்.விவசாயிகள் கூறியதாவது :ஆண்டு தோறும் அமராவதி அணை நிரம்பினாலும், கிடைக்கும் நீரை சேமிக்க போதிய தடுப்பணைகள் இல்லை. மழை காலங்களில், ஒரு நாளில், பல டி.எம்.சி., தண்ணீர் வீணாகிறது. ஆற்றில் இருந்த மணல் கொள்ளையடிக்கப்பட்டதால், மழை காலங்களில் மட்டும் ஆற்றில் நீர் இருக்கும்.



மழை முடிந்ததும், ஆறு வறண்டு விடுகிறது.ஆற்றின் குறுக்கே, தடுப்பணைகள் கட்டினால், மழை காலங்களில் கிடைக்கும் நீரை, வழியோரங்களில் சேமிக்கலாம்.ஆண்டு முழுவதும் ஆற்றில் நீர் இருப்பும், விவசாயம் மற்றும் குடிநீருக்கு பிரச்னை ஏற்படாது. கடந்தாண்டு, நான்கு முறை அணை நிரம்பியும், கடந்த நான்கு மாதமாக தண்ணீர் இல்லாமல், கடும் வறட்சி நிலவி வருகிறது; குடிநீர் வழங்கும், திட்டங்கள் முடங்கியுள்ளன. எனவே, ஐந்து கி.மீ.,துாரத்திற்கு ஒரு தடுப்பணையாவது கட்டவும், குடிநீர் திட்டங்கள் உள்ள பகுதியில் உடனடியாக கட்ட வேண்டும்.



இவ்வாறு, விவசாயிகள் கூறினர்.4 இடங்களில் கட்ட திட்டம்பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகையில்,' அமராவதி ஆற்றின் குறுக்கே தற்போது, ஆறு தடுப்பணைகள் உள்ளன. கரூர் திருமங்கலம், சங்கரண்டாம்பாளையம், காரத்தொழுவு ஒட்டணை உள்ளிட்ட நான்கு இடங்களில் தடுப்பணைகள் கட்ட, திட்ட மதிப்பீடு தயாரித்து அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட இடைவெளிகளில் தடுப்பணைகள் கட்ட உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றனர்.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X