தனியார் கல்லுாரியினர் அனுமதியின்றி நுழையக்கூடாது; அரசு கல்லுாரி அறிவிப்பு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 மே
2019
01:07

உடுமலை : உடுமலை, அரசு கலைக் கல்லுாரியில், தனியார் கல்லுாரிகளைச் சேர்ந்தவர்கள், அனுமதியில்லாமல் நுழையக்கூடாதென அறிவிப்பு வைக்கப்பட்டுள்ளது.உடுமலை, அரசு கலைக் கல்லுாரியில், இளநிலை முதலாமாண்டுக்கான மாணவர் சேர்க்கை நடக்கிறது. மாணவர்களுக்கான தரவரிசைப்பட்டியல், கடந்த 15ம் தேதி ஒட்டப்பட்டது.உடுமலை, பழநி மற்றும் பொள்ளாச்சி பகுதிகளைச் சேர்ந்த தனியார் கல்லுாரியைச் சேர்ந்தவர்கள், சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வழங்கப்பட்ட நாள் முதல், அரசு கலைக்கல்லுாரிக்கு நாள்தோறும் வருகின்றனர்.



அரசு கலைக்கல்லுாரிக்கு சேர வரும் மாணவர்களை, மனம் மாற்றி, அவர்கள் கல்லுாரியில் சேர்வதற்கு வலியுறுத்துகின்றனர். இதனால், மாணவர்கள் குழப்பமடைவதாக, அனுமதியில்லாமல், அரசு கலைக்கல்லுாரியில், தனியார் கல்லுாரியைச் சேர்ந்தவர்கள் நுழைவதாகவும், கல்லுாரி நிர்வாகத்துக்கு புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத்தடுக்கும் வகையில் கல்லுாரி வளாகத்தில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. இதில், அரசு கல்லுாரி வளாகத்தில் தனியார் கல்லுாரியைச் சேர்ந்தவர்கள், இந்த காரணத்தின் அடிப்படையிலும் சேர்க்கைக்கு வரும் மாணவர்களிடம் பிரசாரம் செய்யக்கூடாது. விதிமுறை மீறும் பட்சத்தில் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கவும், போலீசில் புகார் அளிக்கவும் வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X