அரசு மருத்துவமனையில் எச்சரிக்கை அறிவிப்பு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 மே
2019
02:57

மடத்துக்குளம் : மடத்துக்குளம் அரசு மருத்துவமனையில், பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுத்து, அரசு அறிவிப்பு ஒட்டப்பட்டுள்ளது.மடத்துக்குளத்தில் செயல்படும் அரசு மருத்துவமனை, கடந்த 1950ம் ஆண்டு, பஞ்சாயத்து யூனியன் மருந்தகமாக தொடங்கப்பட்டது. பல்வேறுவளர்ச்சி நிலைக்கு பின், 2015 ஏப்ரலில் தாலுகா அரசு மருத்துவமனையாக, தரம் உயர்த்தப்பட்டது.ஆனால், மருத்துவமனையின் அனைத்து பிரிவுகளும் செயல்பட போதிய கட்டட வசதி இல்லை. இதற்காக புதிய கட்டடம் அமைக்கும் பணி, 2015 ஜூலை 15ல் தொடங்கியது.பல மாத கட்டுமான பணிகளுக்குப்பின், இரண்டு தளத்தில், 730 சதுர மீட்டர் பரப்பில் கட்டடம் அமைந்தது.



இந்த புதிய கட்டடத்தின் திறப்பு விழா கடந்த ஆண்டு டிச., 12ம் தேதி வீடியோ கான்பரன்சிங் மூலம் நடந்தது.தற்போது, அனைத்து பிரிவுகளும் புதிய கட்டடத்தில் செயல்படுகிறது. இந்நிலையில், மருத்துவமனையில் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்து அரசு அறிவிப்பு ஒட்டபட்டுள்ளது.அதில், மருத்துவமனை பாதுகாப்பு சட்டம் 48/2008 ன் படி மருத்துவர், செவிலியர் அல்லது பணியாளர்களை தாக்கினாலோ அல்லது அதற்கான முயற்சியில் ஈடுபட்டாலோ,மிரட்டல் விடுத்தாலோ, ஜாமினில் வெளிவர முடியாதபடி கடுமையான வழக்குகள் பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும், என குறிப்பிடப்பட்டுள்ளது.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X