குழந்தைகளுக்கான ஆடை இறக்குமதி
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 மே
2019
03:19

திருப்பூர் : குழந்தைகளுக்கான இந்திய ஆடைகளின் இறக்குமதி, கடந்த 2018- 19 நிதியாண்டில், 19.37 சதவீதம் அதிகரித்துள்ளது, அமெரிக்க அரசின் வர்த்தக இணைய தளம் வாயிலாக தெரியவந்துள்ளது.வளர்ந்த நாடான அமெரிக்கா, சீனா, கம்போடியா, இந்தியா, வங்கதேசம், வியட்நாம் நாடுகளிலிருந்து, ஏராளமான குழந்தை ஆடை இறக்குமதி செய்கிறது. கடந்த 2018--19 நிதியாண்டில், பல்வேறு நாடுகளிலிருந்து, அமெரிக்கா, 16 ஆயிரம் கோடி ரூபாய், மதிப்பிலான குழந்தை ஆடைகளை (பிரிவு 239ல் உள்ள அனைத்துவகை குழந்தை ஆடைகள்) செய்துள்ளது.



கடந்த 2017-18 நிதியாண்டில், 7,400 கோடி ரூபாய் மதிப்பிலான சீன குழந்தை ஆடைகள், அமெரிக்காவில் இறக்குமதியானது; இந்த வர்த்தகம், 2018--19 நிதியாண்டில், 6,600 கோடியாக குறைந்துள்ளது.அதேநேரம், அமெரிக்காவில், நம் நாட்டு குழந்தை ஆடை இறக்குமதி, சிறப்பான வளர்ச்சி கண்டுள்ளது. 2017-18 நிதியாண்டில், 1,290 கோடியாக இருந்த இந்திய ஆடை இறக்குமதி, 2018--19 நிதியாண்டில், 1,540 கோடியாக, 19.37 சதவீதம் உயர்ந்துள்ளது. கம்போடிய குழந்தை ஆடைகளின் இறக்குமதி, 12.96 சதவீதம்; வியட்நாம் ஆடைகளின் இறக்குமதி, 3.75 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது.பின்னலாடை ஆலோசகர் சபரி கிரீஷ் கூறியதாவது:அமெரிக்காவில், நம் நாட்டில் தயாராகும் குழந்தை ஆடைகள் இறக்குமதி, கடந்த நிதியாண்டில், 19.37 சதவீத வளர்ச்சி பெற்றுள்ளது.



அந்நாட்டு சந்தையில், சீன குழந்தை ஆடை இறக்குமதி குறைந்து வருகிறது; ஆனாலும், அமெரிக்காவின் மொத்த குழந்தை ஆடை இறக்குமதியில், 42 சதவீதத்தை சீனா வசப்படுத்திவைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.தொழிலாளர் சம்பளம் உயர்வு, வர்த்தக போர் காரணமாக, நடப்பு ஆண்டு, அமெரிக்காவில், சீன ஆடை இறக்குமதி மேலும் குறையும். இதனை, பயன்படுத்தி, நம் நாட்டு ஏற்றுமதியாளர்கள், அமெரிக்காவுக்கான ஆடை வர்த்தகத்தை அதிகரிக்க முயற்சி செய்யலாம்.



இவ்வாறு, அவர் கூறினார். இந்தியாவுக்கு நான்காமிடம்அமெரிக்காவுக்கான குழந்தை ஆடை இறக்குமதியில், 42 சதவீத பங்களிப்புடன், சீனா முதலிடத்தில் உள்ளது. 11.43 சதவீதத்துடன், கம்போடியா இரண்டாமிடம்; 10.42 சதவீதத்துடன் வியட்நாம் மூன்றாமிடத்தில் உள்ளன. 9.62 சதவீத தேவையை பூர்த்தி செய்து, அமெரிக்க குழந்தை ஆடை இறக்குமதியில், இந்தியான நான்காமிடத்தை பிடித்துள்ளது. 8.60 சதவீதத்துடன், வங்கதேசம், ஐந்தாமிடத்தில் உள்ளது.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X