இனி கிடைக்குமா மரியாதை: சூலூர் வாக்காளர்கள் கவலை
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 மே
2019
03:20

திருப்பூர் : சூலூர் தொகுதி கிராமங்கள் சந்தித்திராத அனுபவங்களை, இடைத்தேர்தல் வழங்கியிருக்கிறது. தேடி வந்த பணம், நாடி வந்த மரியாதை இனி கிடைக்குமா என்று வாக்காளர்கள் கவலையடைந்துள்ளனர்.சூலூர் தொகுதி இடைத்தேர்தல் ஓட்டுப்பதிவு இன்று நடைபெற உள்ளது.கோவை, திருப்பூர், பல்லடம், பொள்ளாச்சி உள்ளிட்ட நகரங்களின் அருகில், இத்தொகுதிக்கு உட்பட்ட கிராமங்கள் உள்ளன. தலைமையகமாக சூலூர் கருதப்பட்டாலும், இங்கிருந்து 35 கி.மீ., மற்றும் அதற்கு மேலும் பயணித்துச் செல்லக்கூடிய கிராமங்கள், இங்கு இருக்கின்றன.



ஆளும் அ.தி.மு.க.,வுக்கும், தி.மு.க.,வுக்கும் கடும் போட்டி நிலவியது.முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம், தி.மு.க., தலைவர் ஸ்டாலின், அ.ம.மு.க., பொதுச்செயலாளர் தினகரன், மக்கள் நீதி மையத் தலைவர் நடிகர் கமல்ஹாசன் பிரசாரத்தில் ஈடுபட்டனர்.இதனால், கடந்த 15 நாட்களில் குடிநீர், சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள், தற்காலிகமாகத் தீர்த்து வைக்கப்பட்டிருந்தன.கலகலப்பும் கைகலப்பும்பல்வேறு கிராமங்களில், உள்ளூர் பிரமுகர்கள், கட்சிகள் மாறிய காட்சிகளும் அரங்கேறின. ஒன்றுபட்டு இருந்த கிராமங்களில்கூட, ஒவ்வொரு கட்சிக்கென்று ஓட்டு சேகரிப்பதற்காக, 'பிரிக்கப்பட்டதும்' காலம் செய்த கோலம்தான்.காணாமல் போன பறக்கும் படைதொகுதியில் பறக்கும் படையினரின் சோதனைகள் உள்ளிட்டவை அரங்கேறினாலும், பல கிராமங்களில், இரவு நேரங்களில் தூள் கிளப்பிய பண பட்டுவாடாவை அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை. கடந்த ஒரு வாரமாகவே, பண பட்டுவாடா பகுதிவாரியாக நடந்து வந்தது. நேற்று இரவு கூட, இது தொடர்ந்தது.வாக்காளர்களைப் பார்க்கும்போதெல்லாம், கரைவேட்டி பிரமுகர்கள் வணக்கம் தெரிவித்துவந்த நிலையில், இனி அந்த மதிப்பும், கவுரவமும் கிடைக்குமா என்று எண்ணி, வாக்காளர்கள் கவலையடைந்துள்ளனர்.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X