| 'ஸ்கேன்' செய்த பத்திரங்களை சரிபார்க்க புதிய கட்டுப்பாடுகள் Dinamalar
'ஸ்கேன்' செய்த பத்திரங்களை சரிபார்க்க புதிய கட்டுப்பாடுகள்
Advertisement
 

பதிவு செய்த நாள்

19 மே
2019
03:23


பதிவுத் துறையில், 2009க்கு முன் பதிவான பத்திரங்கள், 'ஸ்கேன்' செய்யப்படும் போது, அவற்றை சரிபார்ப்பதில், சார் - பதிவாளர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதனால், ஒவ்வொரு பக்கத்தையும் யார் சரிபார்த்தது என்பதும், ஆவணப்படுத்தப்பட உள்ளது.தமிழகத்தில், 2009க்கு முன் பதிவான பத்திரங்கள் அனைத்தும், காகித வடிவிலேயே உள்ளன. பதிவு பணிகள், 'ஆன்லைன்' முறைக்கு மாற்றப்பட்டுள்ளதால், பழைய ஆவணங்களை பயன்படுத்துவது சிக்கலாகஉள்ளது.எனவே, 1865 முதல், 2009 வரையிலான பத்திரங்களை, 'டிஜிட்டல்' மயமாக்க திட்டமிடப்பட்டது. இதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட ஆறு நிறுவனங்கள், 'ஸ்கேனிங்' பணிகளை, பிப்., மாதம் துவங்கின. மொத்தம் உள்ள, 30 கோடி பக்கங்களில், சார் -பதிவாளர் அலுவலக நிலையில், 60 சதவீத பணிகள் நிறைவடைந்துவிட்டதாக கூறப்படுகிறது. இந்த ஆவணங்களை சரிபார்ப்பதில் சிக்கல்ஏற்பட்டுள்ளது.இப்பணிகளின், தற்போதைய நிலவரம் குறித்து, பதிவுத்துறை தலைவர் பொறுப்பு வகிக்கும், வணிக வரித்துறை செயலர் பாலசந்திரன், சில நாட்களுக்கு முன் ஆய்வு செய்தார். இதில், தனியார் நிறுவனங்கள் மேற்கொள்ளும் பணிகளை சரிபார்ப்பதில், அதிகாரிகள் சரிவர செயல்படவில்லை என்பது தெரிந்தது.இது குறித்து, பதிவுத்துறை தலைமையக அதிகாரி ஒருவர் கூறியதாவது:'ஸ்கேன்' செய்யப்பட்ட பழைய பத்திரங்களை சரிபார்ப்பதில், சார் - பதிவாளர் நிலையில், புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.ஒவ்வொரு நிலையிலும் சரிபார்த்த அலுவலர் பெயர், பதவி நிலை, கையெழுத்து இருப்பது கட்டாயமாகி உள்ளது.மேலும், மாவட்ட பதிவாளர், டி.ஐ.ஜி., அலுவலகங்களில் இருக்கும் உபரி பணியாளர்களும், அலுவலர்களும், சரிபார்ப்பு பணியில் ஈடுபட வேண்டும் என, பதிவுத் துறை தலைவர் உத்தரவிட்டுள்ளார்.இவ்வாறு அவர்கூறினார்.2.90 கோடி பக்கங்கள் சரிபார்ப்பு பணி முடிவுபத்திரங்களை டிஜிட்டல் மயமாக்கும் பணிகளுக்காக, தேர்வு செய்யப்பட்ட ஆறு நிறுவனங்கள், பணியாளர்களை அமர்த்தி, ஸ்கேனிங் பணிகளை முடுக்கி விட்டுள்ளன.இந்த பணிகளின் தற்போதைய நிலவரம் குறித்து, தலைமை செயலர் தலைமையில், சமீபத்தில் நடந்த கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டது.இதில் தெரிவிக்கப்பட்ட கருத்துகள் அடிப்படையில், பதிவுத்துறை அலுவலர்களுக்கு, புதிய அறிவுறுத்தல்கள், சுற்றறிக்கையாக அனுப்பட்டன.சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:பழைய பத்திரங்களை ஸ்கேனிங் செய்யும் தனியார் நிறுவனம் அளித்த புள்ளி விபரங்கள் அடிப்படையில், நான்கு மாதங்களில், 4.60 கோடி பக்கங்கள், ஸ்கேன் செய்யப்பட்டு, சரி பார்ப்புக்கு அனுப்பப்பட்டுள்ளன. இதில், 2.90 கோடி பக்கங்கள் சரி பார்க்கப்பட்டுள்ளன.ஒரு முறை மட்டுமே மேற்கொள்ளப்படும் பணி என்பதால், இதற்கு, சிறப்பு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். சரி பார்ப்பு பணிகளை, விரைந்து நிறைவு செய்யாததற்கான காரணங்களை, மே, 31க்குள் தெரிவிக்க வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.- நமது நிருபர் -

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X