| தடுப்பணை பணிகளில் வேகம் Dinamalar
தடுப்பணை பணிகளில் வேகம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

19 மே
2019
03:47

மாநிலம் முழுவதும் நடந்து வரும், தடுப்பணைகள் கட்டுமானம் உள்ளிட்ட, நீர்நிலைகள் தொடர்பான பணிகளை விரைவுப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.மாநிலம் முழுவதும், ஆறுகளின் குறுக்கே கட்டப்பட்டுள்ள, 89 அணைகள், பொதுப்பணித்துறையின், நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் உள்ளன. இதில், மேட்டூர், முல்லைப்பெரியாறு, பவானிசாகர் உள்ளிட்ட, 15 முக்கிய அணைகள் வாயிலாக, பல மாவட்டங்களின் பாசனம் மற்றும் குடிநீர் தேவை, பூர்த்தி செய்யப்பட்டுள்ளது.



ஆறுகளின் குறுக்கே நீரை சேமிக்கும் வகையில், அணைகள் மட்டுமின்றி, 100க்கும் மேற்பட்ட தடுப்பணைகளை கட்ட, நீர்வளத்துறை திட்டமிட்டுள்ளது.உலகவங்கி நிதியுதவியுடன், இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. தற்போது, காஞ்சிபுரம், திருவள்ளூர், தஞ்சாவூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில், 25க்கும் மேற்பட்ட தடுப்பணைகள் கட்டும் பணிகள் செயல்பாட்டில் உள்ளன.குடிமராமத்து திட்டத்தின் கீழ், திருநெல்வேலி, விருதுநகர், கன்னியாகுமரி, சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில், ஏரிகளை புனரமைக்கும் பணிகளும் நடந்து வருகின்றன.மேற்கு தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகும் ஆறுகளுக்கு, தென் மேற்கு பருவ மழையில் அதிகளவில் நீர்வரத்து கிடைக்கும். ஜூனில் தென் மேற்கு பருவ மழை துவங்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.



எனவே, மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் தடுப்பணைகள் கட்டுமானம் மற்றும் ஏரிகளை புனரமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க, நீர்வளத்துறை உயர் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.




- நமது நிருபர் -

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X