| மோர்பட்டி குடிநீர் பிரச்னைக்கு தீர்வு, தினமலர் செய்தி எதிரொலி Dinamalar
மோர்பட்டி குடிநீர் பிரச்னைக்கு தீர்வு, தினமலர் செய்தி எதிரொலி
Advertisement
 

பதிவு செய்த நாள்

19 மே
2019
03:54

வடமதுரை: தினமலர் செய்தி எதிரொலியாக மோர்பட்டி குடிநீர் பிரச்னைக்கு தீர்வு ஏற்பட்டுள்ளது.மோர்பட்டி மக்களின் குடிநீர் தேவைக்கு வறட்டாறு அருகே ஆழ்துளை கிணற்றில் இருந்து நீர் கிடைத்தது. அப்பகுதியில் பால கட்டுமான பணிக்காக ஆழ்துளை கிணறின் திட்டுகளை உயர்த்தி கட்டியபோது மின்மோட்டார் கழன்று உள்ளே விழுந்தது. வெளியே எடுக்காததால் குடிநீர் சப்ளை 3 மாதங்களாக தடைபட்டுள்ளது. இதனால் கிராமமக்கள் அவதிப்பட்டு வந்தனர்.இதுகுறித்தும், இக்கிராமத்தின் வழியே செல்லும் காவிரி திட்ட குழாயில் இருந்து நீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக ஒன்றிய அதிகாரிகள் சிறப்பு கவனம் செலுத்தி சித்துவார்பட்டி ரோட்டில் மற்றொரு தெருவில் இருக்கும் 60 ஆயிரம் லிட்டர் மேல்நிலை தொட்டியில் இருந்து குழாய் அமைத்து மோர்பட்டியில் 5 தெருக்குழாய்கள் அமைத்துள்ளனர்.இதே போல வடமதுரையில் இருந்து அனுப்பப்படும் காவிரி திட்ட குடிநீர் மோர்பட்டி ஊராட்சி கோப்பம்பட்டி மேல்நிலை தொட்டியில் ஏறுமளவிற்கு அழுத்தம் இல்லாமல் இருந்தது. இதனால் கோப்பம்பட்டிக்கு காவிரி நீர் திட்ட இணைப்பு இருந்தும் நீர் கிடைக்காத நிலை இருந்தது. இதற்கு தீர்வாக தொட்டிக்கு கீழே தெருக்குழாய்கள் ஊராட்சி சார்பில் அமைக்கப்பட்டு காவிரி நீர் வினியோகம் துவங்கியுள்ளது.

 

Advertisement
மேலும் திண்டுக்கல் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X