| ஓட்டு எண்ணும் மையத்திற்கு மூன்று வழிகளில் மின் சப்ளை Dinamalar
ஓட்டு எண்ணும் மையத்திற்கு மூன்று வழிகளில் மின் சப்ளை
Advertisement
 

பதிவு செய்த நாள்

19 மே
2019
03:55

திண்டுக்கல்: திண்டுக்கல் லோக்சபா தொகுதி ஓட்டு எண்ணிக்கை மையத்தில் மூன்று வழிகளில் மின்சப்ளை செய்ய மின்வாரியம் முடிவு செய்துள்ளது.திண்டுக்கல் லோக்சபா, நிலக்கோட்டை சட்டசபைக்கு பதிவான ஓட்டுகள் ரெட்டியார்சத்திரத்தில் உள்ள அண்ணா பல்கலை உறுப்பு கல்லுாரியில் எண்ணப்படுகிறது. அதற்கான முன்னேற்பாடு பணிகளில் மாவட்ட நிர்வாகம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.மின் வாரியம் சார்பில் இரண்டு செயற்பொறியாளர்கள் தலைமையில், 6 உதவி செயற்பொறியாளர்கள், 16 ஒயர்மேன், 7 போர்மேன் மற்றும் அலுவலர்கள் என 62 பேர் ஓட்டு எண்ணிக்கைக்கு முந்தைய நாளான மே 22 இரவு முதல் மே 24 காலை வரை பணியில் ஈடுபடுகின்றனர்.ஓட்டு எண்ணிக்கை நடத்தும் மையத்திற்கு ரெட்டியார் சத்திரம் துணை மின் நிலையத்திலிருந்து, ஆலைகளுக்கு கொண்டு செல்லப்படும் மின் வழித்தடத்திலிருந்து 450 கிலோவாட் மின்சப்ளை செய்யப்படுகிறது. மின்சாரம் தடைபட்டால் மாற்று ஏற்பாடாக அங்குநகர் துணைமின்நிலையத்திலிருந்து தொழிற்சாலைகளுக்கு செல்லும் மின்வழித்தடத்திலிருந்தும் இங்கு மின் வசதி செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கூடுதலாக ஜெனரேட்டர் வசதியும் செய்யப்பட்டுள்ளது.

 

Advertisement
மேலும் திண்டுக்கல் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X