| 2 ஜெனரேட்டர்கள் இருந்தும் பயனில்லாத அரசு மருத்துவமனை, 'நெருக்கடி'யை சமாளிக்கும் வேடசந்தூர் டாக்டர்கள் Dinamalar
2 ஜெனரேட்டர்கள் இருந்தும் பயனில்லாத அரசு மருத்துவமனை, 'நெருக்கடி'யை சமாளிக்கும் வேடசந்தூர் டாக்டர்கள்
Advertisement
 

பதிவு செய்த நாள்

19 மே
2019
03:56

வேடசந்துார்: இரண்டு ஜெனரேட்டர்கள் இருந்தும் பயனில்லாததால், நோயாளியின் உறவினர்களே வாடகைக்கு எடுத்து நிலைமையை சமாளிக்கும் அவலநிலை வேடசந்துார் அரசு மருத்துவமனையில் உள்ளது.வேடசந்துார் நகர் பகுதியில் நேற்று முன்தினம் மின்தடை அறிவித்து இருந்தனர். அதேநேரம் அங்குள்ள அரசு தாலுகா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஒரு கர்ப்பிணிக்கு பிரசவவலி ஏற்பட்டது.நெருக்கடியான நிலையில் அங்கிருந்த 2 ஜெனரேட்டர்களும் இயங்காதது தெரிந்தது. இதனால், வாடகைக்கு ஜெனரேட்டர் எடுத்து வரும்படி நோயாளியின் உறுவினர்களிடம் அறிவுறுத்தினர். இதையடுத்து ஒரு டெம்போவில் ஜெனரேட்டரை கொண்டு வந்தனர். ஆப்பரேஷன் தியேட்டர் ஜன்னல் அருகே நிறுத்தி மின் சப்ளையை கொடுத்தனர். ஆப்பரேஷன் முடிந்து தாயும், சேயும் நலமாக உள்ளனர். நெருக்கடி நிலையில் சமாளித்த அரசு மருத்துவமனை டாக்டர்களின் பொறுப்புணர்வு பாராட்டத்தக்கதே.அதேசமயம் ஒரு தாலுகா மருத்துவமனையில் உள்ள 2 ஜெனரேட்டர்களும் பழுது பார்க்கப்படாமல், அவசர நேரத்தில் பயன்படாமல் இருப்பது வேதனைக்குரியதே. இங்கு தனியார் சிமென்ட் ஆலை சார்பில் நவீன ஜெனரேட்டர் வழங்கப்பட்டுள்ளது. அதையெல்லாம் காட்சிப் பொருளாக வைத்திருப்பது சரியா என பொது மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

 

Advertisement
மேலும் திண்டுக்கல் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X