| மாவட்டத்தில் ஒரே நாளில் அடுத்தடுத்து மூவர் கொலை: பகை தீர்த்த கும்பல்கள் Dinamalar
மாவட்டத்தில் ஒரே நாளில் அடுத்தடுத்து மூவர் கொலை: பகை தீர்த்த கும்பல்கள்
Advertisement
 

பதிவு செய்த நாள்

19 மே
2019
03:58

திண்டுக்கல்: திண்டுக்கல் நெட்டுத்தெரு ஆறுமுகம் 42. துப்புரவு தொழிலாளி. நேற்று முன்தினம் இரவு 9:30 மணியளவில் நாகல்நகர் அரண்மனை குளம் அருகே வெட்டி படுகொலை செய்யப்பட்டார். தெற்கு போலீசார் அதே பகுதியை சேர்ந்த காளிதாஸ் 37, மாரியப்பன் 39, ஆகியோரை கைது செய்தனர்.இவர்கள் இருவரும் நாகல் நகர் செல்லும் வழியில் ஒரு டாஸ்மாக் கடையில் மது அருந்தினர். அங்கு வந்த ஆறுமுகம் மது அருந்திய நிலையில், அவர்களை அழைப்பதற்காக சிறிய கல்லை அவர்கள் மீது எறிந்துள்ளார். ஆத்திரமடைந்த இருவரும் ஆறுமுகத்தை வெட்டி கொலை செய்தனர்.பழநியில் 2 கொலைகள்பழநி அடிவாரம் மருத்துவநகரை சேர்ந்தவர் சின்னக்கண்ணு. ஆறு மாதத்துக்கு முன்பு மனைவியுடன் பூலாம்பட்டி ரோடு அமரபூண்டியில் வாடகை வீட்டில் குடியேறினார். இவரது மகன் மண்டையன் என்ற சங்கர் 27. நேற்று முன்தினம் இரவு 9:45 மணியளவில் வீட்டில் இருந்தபோது, ஒரு கும்பல் அவரை வெட்டி கொலை செய்தது.சங்கர் கடந்த 2017-ம் ஆண்டு அவரது நண்பர் மாரிமுத்து என்பவருடன் பிறந்த நாள் கொண்டாடினார். அப்போது நண்பர்கள் இருவருக்கும் பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதில் மாரிமுத்துவை பாலசமுத்திரம் செல்லும் ரோட்டில் உள்ள ஒரு டாஸ்மாக் கடையில் வைத்து சங்கர் கொலை செய்தார்.மாரிமுத்துவின் தம்பி வீரவேல், மைத்துனர் பெரியசாமி இருவரும் சேர்ந்து சங்கரை தீர்த்துக் கட்ட முடிவு செய்தனர். அவர் சிறையில் இருந்ததால் திட்டத்தை ஒத்தி வைத்தனர். கடந்த ஆண்டு சங்கர் வெளியே வந்த நிலையில், மீண்டும் கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். கடந்த 15 நாளைக்கு முன் புதான் வெளியில் வந்தார்.இரவு நேரங்களில் மட்டுமே வீட்டுக்கு வந்துள்ளார். இதனால், அவர் வீட்டுக்கு அருகே உள்ள மணி என்பவர் மூலம் நோட்டமிட்ட வீரவேல், பெரியசாமி, நண்பர் அலெக்ஸ் மற்றும் சிலர் சேர்ந்து வீட்டில் இருந்தவரை வெளியே வரவழைத்து வெட்டிக் கொலை செய்தனர். ஆயக்குடி போலீசார் கொலையாளிகளை தேடி வருகின்றனர்.பழநி ஆயக்குடி அப்துல்கலாம் ஆசாத்நகரை சேர்ந்தவர் தாஜூதீன் 44. பிரியாணி கடை வைத்துள்ளார். இவரது தம்பிகள் கமருதீன் 37, ஜாகீர் ஹூசைன் 33. இவர்களுக்கு சொந்தமான தோட்டம் பழநி - கொடைக்கானல் ரோட்டில் உள்ளது. இந்த தோட்டம் தொடர்பாக தகராறு இருந்துள்ளது. இரு நாட்களுக்கு முன்பு தாஜூதீன் தோட்டத்தின் பூட்டை உடைத்து அங்கு சென்றுள்ளார்.ஆத்திரமடைந்த தம்பிகள் இருவரும் தாஜூதீனை கத்தியால் குத்தி கொலை செய்தனர். மாவட்டத்தில் ஒரே நாள் இரவில் 3 கொலைகள் அடுத்தடுத்து நடந்ததால் போலீசார் அதிர்ச்சிக்குள்ளாகினர்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X