| மின்கட்டண ரசீதில் வைப்பு தொகை விபரம், 65 ஆயிரம் நுகர்வோர் கூடுதல் பயன்பாடு Dinamalar
மின்கட்டண ரசீதில் வைப்பு தொகை விபரம், 65 ஆயிரம் நுகர்வோர் கூடுதல் பயன்பாடு
Advertisement
 

பதிவு செய்த நாள்

19 மே
2019
04:02

திண்டுக்கல்: பயன்படுத்தும் மின் அளவீட்டுக்கு ஏற்ப ஒவ்வொரு ஆண்டும் வைப்பு தொகை வசூலிக்கப்படுகிறது. நடப்பாண்டில் திண்டுக்கல்லில் 65 ஆயிரத்து 635 பேர் கூடுதல் வைப்பு தொகை செலுத்த உள்ளனர்.திண்டுக்கல் மாவட்டத்தில் 8 லட்சத்து 53 ஆயிரத்து 50 மின் நுகர்வோர் உள்ளனர். திண்டுக்கல் நகரில் மட்டும் ஒரு லட்சத்து 93 ஆயிரம் இணைப்புகள் உள்ளது. புதிய மின் இணைப்பு வழங்கும்போது மின் நுகர்வோரிடமிருந்து 'காப்பு வைப்பு தொகை' வசூலிக்கப்படுகிறது.வீடு மின் இணைப்புக்கு ஒரு முனை ரூ.200, மும்முனை ரூ.600 வைப்பு தொகையாக வசூலிக்கப்படுகிறது. இதற்கு மின்வாரியம் ஆண்டுக்கு 6.65 சதவீதம் வட்டி வழங்குகிறது. மின்சார ஒழுங்குமுறை ஆணைய விதிகளின்படி மின்பயன்பாட்டை பொறுத்து இரண்டு ஆண்டுக்கு ஒரு முறை வைப்பு தொகையில் மாற்றம் செய்யப்படுகிறது.கூடுதலாக மின்சாரம் பயன்படுத்தும்போது, கூடுதல் 'வைப்பு தொகை' வசூலிக்கப்படுகிறது. நடப்பாண்டு திண்டுக்கல் மாவட்டத்தில் மொத்தமுள்ள மின் நுகர்வோரில் 65 ஆயிரத்து 635 பேர் அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக மின்சாரம் பயன்படுத்தியது தெரிய வந்தது. இதன் மூலம் வைப்பு தொகை ரூ.11 கோடியே 33 லட்சத்து 34 ஆயிரம் ரூபாய் வசூலிக்கப்பட உள்ளது.கடந்த 3-ம் தேதி முதல் மின்கட்டணம் செலுத்தும் நுகர்வோரிடம் கூடுதல் வைப்பு தொகை வசூலிக்கப்பட்டு வருகிறது. இதுவரை 10 ஆயிரத்து 833 பேர் ரூ.1 கோடியே 24 லட்சம் செலுத்தியுள்ளனர். மீதி உள்ளவர்கள் மின் கட்டணம் செலுத்த வரும்போது, அவர்களுக்கான ரசீதில் கூடுதல் தொகைக்கான விபரம் குறிப்பிடப்பட்டு வருகிறது.மின்வாரிய அதிகாரி ஒருவர் கூறும்போது: நுகர்வோர் ஓராண்டு செலுத்திய மின் கட்டணத்தை 12 ஆல் வகுத்து வரும் தொகையை மூன்றால் பெருக்கினால் வருவதை வைப்பு தொகையாக கணக்கிடுவர். ஏற்கனவே உள்ள வைப்பு தொகையுடன் ஒப்பிடும்போது, கூடுதல் வைப்பு தொகை குறைவாக இருந்தால் செலுத்த தேவையில்லை. அதிகமாக இருந்தால் மின்கட்டண ரசீதில் கூடுதல் தொகை குறிப்பிடப்படுகிறது.மின்கட்டணம் செலுத்திய 30 நாளைக்குள் இந்த தொகையை செலுத்த வேண்டும். ஒரே தவணையில் பணம் செலுத்த முடியாதவர்கள் மூன்று (ஆறு மாதம்) தவணைகளில் செலுத்தலாம். கூடுதல் வைப்பு தொகை செலுத்துவோர், தாங்கள் பயன்படுத்தும் மின் பளுவுக்கு ஏற்ப அந்த பளுவை உயர்த்தி கொள்ள வேண்டும். தொடர்ந்து கூடுதல் பளுவை பயன்படுத்தி குறைந்த சப்ளை பெற்றிருப்பது கண்டறியப்பட்டால், அபராதத்துடன் மின்கட்டணம் செலுத்த வேண்டி வரும், என்றார்.

 

Advertisement
மேலும் திண்டுக்கல் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X