| துப்பாக்கியுடன் சென்ற ஏட்டு பைக் விபத்தில் காயம் Dinamalar
துப்பாக்கியுடன் சென்ற ஏட்டு பைக் விபத்தில் காயம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

19 மே
2019
07:39

திருச்சி: தேர்தல் விதிமுறை மீறி, பைக்கில் உறவினருடன் துப்பாக்கி எடுத்துச் சென்ற ஆயுதப்படை போலீஸ் ஏட்டு, விபத்தில் சிக்கி காயமடைந்தார்.


திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே, கல்பட்டி சத்திரம் பகுதியில் வந்த பைக், நேற்று முன்தினம் இரவு, சாலையின் தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. பைக்கில் வந்த இருவரும், காயமடைந்தனர். அவர்களை, பொதுமக்கள் மீட்டு விசாரித்த போது, அவர்கள், துப்பாக்கியை மறைத்து எடுத்துச் சென்ற போது, விபத்தில் சிக்கியது தெரிந்தது. இதனால், கிராம மக்கள், போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். மணப்பாறை போலீசார், இருவரிடமும் விசாரித்தனர். இருவரில் ஒருவர், திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரை அடுத்த சித்திக்கிழவனூரை சேர்ந்த கார்த்திக், 30, என்பதும், திருச்சி ஆயுதப்படை போலீசில் ஏட்டாக பணிபுரிவதாகவும் தெரிவித்தார். மேலும், தந்தை காளியப்பன் இறந்து விட்டதால், அவர் வைத்திருந்த ஏர்கன் துப்பாக்கியை, உறவினருடன் சேர்ந்து, திருச்சியில், தான் வசிக்கும் போலீஸ் குடியிருப்புக்கு கொண்டு சென்றதாக தெரிவித்தார். அவரிடம் இருந்த துப்பாக்கியை பறிமுதல் செய்தனர். தேர்தல் நடத்தை விதிமுறைப்படி, துப்பாக்கி வைத்திருப்பவர்கள், அவற்றை போலீசில் ஒப்படைத்திருக்க வேண்டும். ஆனால், ஆயுதப்படை போலீஸ் ஏட்டாக இருந்தும், ஏர்கன் துப்பாக்கி எனக் கூறி, போலீசில் ஒப்படைக்காமல் வைத்திருந்தது பற்றி, தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.


 

Advertisement
மேலும் திருச்சி மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X