பொது அறிவை வளர்க்கும் அரசு பஸ் கண்டக்டர்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 மே
2019
07:39

தஞ்சாவூர்: தஞ்சையில் அரசு பஸ் கண்டக்டர், பொது அறிவு சார்ந்த கேள்வி பதிலை, தினமும் பஸ்சில் ஒட்டி வருகிறார்.


திருவாரூர், மன்னார்குடி அடுத்த அசேஷம் பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்த், 45; அரசு பஸ் கண்டக்டர். மன்னார்குடி டிப்போவில் பணியாற்றி வருகிறார்.மன்னார்குடியில் இருந்து தஞ்சை வழியாக திருச்சி செல்லும் அரசு பஸ்சில், 2010ம் பணியில் சேர்ந்தார்.இந்நிலையில், 2012ம் ஆண்டு முதல், தாய்மை, நட்பு என பல்வேறுதலைப்புகளில் உள்ள கவிதைகளை, இவர் வேலைக்கு வரும் நாளில், பஸ்சின் உள்ளே சிறிய பேப்பரில் எழுதி ஒட்டி வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். கடந்த ஒரு ஆண்டாக, பொது அறிவு சார்ந்த கேள்வி பதில்களை, 'பிரின்ட் அவுட்' எடுத்து, பஸ்சில் ஒட்டி வருகிறார். இது பயணியர், மாணவர்கள், அரசு ஊழியர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதனால், அவருக்குப் பாராட்டுகளும் குவிந்து வருகின்றன.


கண்டக்டர் ஆனந்த் கூறியதாவது: என் அம்மா மறைவுக்குப் பின், அவர் மீதுள்ள பாசத்தால், முதலில் தாய்மை குறித்த கவிதைகள், வாசகங்களை எழுதி ஒட்டி வந்தேன்.அதன் பிறகு செய்தித்தாள், மொபைல் போனில் வரும் கவிதைகள், வாசகங்களை ஒட்டி வந்தேன்.தற்போது, என் மனைவி ஆசிரியையாக உள்ளதால், அவரின் உதவியுடன், பொது அறிவு சார்ந்த கேள்வி பதில் ஒன்றை தினமும் ஒட்டி வருகிறேன். இது, அரசு வேலைக்கு முயற்சி செய்கிறவர்களுக்கும், மாணவர்களுக்கும் பயன் உள்ளதாக இருக்கும்.இன்னும் அதிகமான பொது அறிவு கேள்வி பதில்களை ஒட்ட திட்டமிட்டு உள்ளேன். அத்துடன் பஸ்சை மிகவும் சுத்தமாக வைத்திருப்பதாலும், என்னையும், டிரைவர் அசோக் குமாரையும் பயணியர் வெகுவாக பாராட்டி செல்கின்றனர். இவ்வாறு, அவர் கூறினார்.


 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X