வனப்பகுதியில் தண்ணீர் நிரப்ப வனவிலங்கு ஆர்வலர்கள் கோரிக்கை
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 மே
2019
09:12

கிருஷ்ணகிரி: விலங்குகள் சாலையை கடப்பதை தடுக்க வனப்பகுதியில் தண்ணீர் நிரப்ப வேண்டும் என, வனவிலங்கு ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஹள்ளி ஒன்றியம் நாரலப்பள்ளி காப்புக்காட்டில், கரடி, மயில், முயல், மலைப்பாம்புகள் போன்ற விலங்கு மற்றும் பறவைகள் உள்ளன. பருவமழையின்றி வனப்பகுதியில் உள்ள குளங்கள், ஏரிகள் நீரின்றி வறண்டுள்ளன. இதனால், காட்டில் வசிக்கும் விலங்குகள் தண்ணீரை தேடி, கிராமத்திற்குள் புகுந்து விடுகின்றன. அவ்வாறு வரும் மான், கரடி போன்றவைகள் சாலையை கடக்கும் போது, விபத்தில் சிக்கி இறக்க நேரிடுகிறது. மகாராஜகடை அடுத்த பொம்மரசனப்பள்ளி கசிவுநீர் குட்டை அருகே, பத்தடி அகலத்தில், ஆறு அடி பள்ளமான கிணறு ஒன்று உள்ளது. இதில் கோடையிலும் தண்ணீர் வற்றாமல் இருப்பதால், விலங்குகள் இங்கு தண்ணீர் குடிக்க வரும். ஆனால், கடந்த ஆண்டு முதல் பருவமழை பொய்த்ததால், இக்கிணற்றில் தண்ணீரின்றி காய்ந்துள்ளது. இதனால் இப்பகுதியில் உள்ள விலங்குகள் தண்ணீர் பற்றாக் குறையால் சாலையை கடந்து கிராமத்திற்குள் வரும் அபாயம் உள்ளது. எனவே, வனத்துறை சார்பில், இங்கு தண்ணீர் நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வனவிலங்கு ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சாலையில் செல்லும் சிலர், மது குடித்துவிட்டு, காலி பாட்டில்களை உடைத்து வீசுகின்றனர். இதனால் விலங்குகளுக்கு காயம் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, இங்கு மது குடிப்பவர்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X