| கி.கிரி., - பெங்களூரு சாலையில் அதிவேகத்தில் பூ வாகனங்கள் Dinamalar
கி.கிரி., - பெங்களூரு சாலையில் அதிவேகத்தில் பூ வாகனங்கள்
Advertisement
 

பதிவு செய்த நாள்

19 மே
2019
09:15

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், அதிவேகமாக செல்லும், பூ வாகனங்களால் மற்ற வாகன ஓட்டிகள் அச்சமடைந்து வருகின்றனர்.


கிருஷ்ணகிரி மாவட்டத்தில், தென்பெண்ணை ஆற்றுப்படுகை பகுதிகளான அவதானபட்டி, பெரியமுத்தூர், சின்னமுத்தூர், திம்மாபுரம், மலையாண்டஹள்ளி, காவேரிப்பட்டணம், தேர்பட்டி, சந்தாபுரம், டேம் கால்வாய், வேலம்பட்டி மற்றும் தொகரப்பள்ளி, மத்தூர், கண்ணன்டஹள்ளி சுற்றுவட்டார பகுதிகளில், ஆயிரம் ?ஹக்டேருக்கு மேல் குண்டுமல்லி சாகுபடி செய்யப்படுகிறது. இங்கு விளையும் மல்லி காலையில் அறுவடை செய்யப்பட்டு, பிக்-அப் வேன்களில், பெங்களூருக்கு எடுத்து செல்லப்பட்டு, அங்கிருந்து விமானத்தில், வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளுக்கு அனுப்பப்படுகிறது. காலையில் மொட்டாக அறுவடை செய்யப்படும் குண்டுமல்லி, பிக்-அப் வேன்களில் ஏற்றப்பட்டு, அது மலருவதற்குள் பெங்களூரு மார்க்கெட்டுக்கு கொண்டு செல்லப்படுகிறது. இதனால், கிருஷ்ணகிரியில் ஏற்றப்படும் குண்டுமல்லியை, விரைவில் பெங்களூரு கொண்டு சேர்க்க பிக்-அப் வேன்களை, டிரைவர்கள் உயிரை பணயம் வைத்து, அதிவேமாக ஓட்டுகின்றனர். கிருஷ்ணகிரி டோல்கேட்டில் போக்குவரத்து துறையினர் மற்றும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு, அதிவேகமாக வரும் வாகனங்களுக்கு, அபராதம் விதிக்கின்றனர். அபராதத்தை கட்டிவிடும் டிரைவர்கள், மீண்டும் அங்கிருந்து அதிவேகமாக செல்வதால், தேசிய நெடுஞ்சாலையில் செல்லும், வாகன ஓட்டிகள் அச்சமடைந்து வருகின்றனர். இதனால், அடிக்கடி விபத்துகளும் ஏற்படுகிறது. எனவே, பாதுகாப்பு கருதி அதிவேகமாக செல்லும் வாகனங்களின் லைசென்சை வட்டார போக்குவரத்து துறையினர் ரத்து செய்ய வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


 

Advertisement
மேலும் கிருஷ்ணகிரி மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X