| ஓசூரில் பராமரிப்பு இல்லாத 23 வாகன தகுதிச்சான்று ரத்து Dinamalar
ஓசூரில் பராமரிப்பு இல்லாத 23 வாகன தகுதிச்சான்று ரத்து
Advertisement
 

பதிவு செய்த நாள்

19 மே
2019
09:15

ஓசூர்: ஓசூரில் நேற்று துவங்கிய தனியார் பள்ளி வாகனங்கள் ஆய்வில், உரிய முறையில் பராமரிப்பு இல்லாத, 23 வாகனங்களின் தகுதிச்சான்று ரத்து செய்யப்பட்டது.


ஓசூர் வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில், ஆண்டுதோறும் தனியார் பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு, 99 தனியார் பள்ளிகள் சார்பில் இயக்கப்படும் பஸ்கள், வேன்கள் என, மொத்தம், 622 வாகனங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட உள்ளன. முதற்கட்டமாக நேற்று காலை, அதியமான் கல்லூரி வளாகத்தில் மொத்தம், 186 வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டன. ஓசூர் டி.எஸ்.பி., மீனாட்சி, ஆய்வை துவக்கி வைத்து, வாகனங்களில் செய்யப்பட்டுள்ள அவசரகால வழி, தீ தடுப்பு உபகரணங்கள் மற்றும் இதர பாதுகாப்பு வசதிகள் குறித்து பார்வையிட்டார். தொடர்ந்து, ஆர்.டி.ஓ., அசோகன் தலைமையில், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் விஜயகுமார், தரணிதரன் ஆகியோர், பள்ளி வாகனங்கள் ஒவ்வொன்றாக சோதனை செய்தனர். அப்போது, உரிய முறையில் பராமரிப்பு இல்லாத, 23 வாகனங்களின் தகுதிச்சான்று ரத்து செய்யப்பட்டன. வாகன குறைபாடுகளை சரி செய்த பின், மீண்டும் தகுதிச்சான்று வழங்கப்படும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.


 

Advertisement
மேலும் கிருஷ்ணகிரி மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X