குன்னுார்: நீலகிரிக்கு நுழைவாயில் பகுதியான பர்லியார் பகுதியில், அரசு போக்குவரத்து கழக கேன்டீன் உட்பட ஏராளமான கடைகள் உள்ளன. போக்குவரத்து கழக அதிகாரிகள் வாய்மொழி உத்தரவால், அனைத்து அரசு பஸ்களும் இங்கு கட்டாயம் நிறுத்தி செல்லும் நிலை உள்ளது.மேலும், சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ள நிலையில், மேட்டுப்பாளையத்தில் இருந்து ஏராளமான வாகனங்கள் வருகின்றன. ஆனால், இங்கு கேன்டீன் உட்பட பெரும்பாலான கடைகளில் சாயம் கலந்த டீயை விற்பனை செய்வதையும், சுகாதாரமற்ற பலகாரங்கள் வைத்துள்ளதையும், உணவு கலப்பட பாதுகாப்பு துறை அதிகாரிகள் யாரும் கண்டுகொள்ளாமல் உள்ளனர். எனவே, சாயம் கலந்த டீயை தடுப்பதுடன், சுகாதாரமான முறையில் பலகாரங்களை வைக்க உத்தரவிட வேண்டும்.