சாலையில் தேங்கிய மழைநீர் போக்குவரத்து பாதிப்பு | நீலகிரி செய்திகள் | Dinamalar
சாலையில் தேங்கிய மழைநீர் போக்குவரத்து பாதிப்பு
Advertisement
 

பதிவு செய்த நாள்

19 மே
2019
23:21

கூடலுார் : முதுமலை, தெப்பகாட்டில், பலத்த மழையின் போது, சாலையில் மழைநீர் தேங்கி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால், சுற்றுலா பயணிகள் சிரமம் அடைந்தனர்.முதுமலை புலிகள் காப்பகத்தில், நேற்று முன்தினம், மாலை ஒன்றரை மணி நேரம் பலத்த காற்றுடன் மழை கொட்டி தீர்த்தது. இதில், தெப்பகாடு பகுதியில், சாலையில் மழைநீர் தேங்கியதால் அப்பகுதியில், சுற்றுலா வாகனங்கள், செல்ல முடியாமல் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.இதனால், வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருந்ததால் குறிப்பிட்ட நேரத்தில் செல்ல முடியாமல், சுற்றுலா பயணிகள் அதிருப்தி அடைந்தனர். போலீசார் மழையில் நனைந்தபடி, போக்குவரத்தை சீரமைத்தனர்.

 

Advertisement
மேலும் நீலகிரி மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X