| கடலாடியில் புளியமுத்து கொள்முதல் ஜோர் Dinamalar
கடலாடியில் புளியமுத்து கொள்முதல் ஜோர்
Advertisement
 

பதிவு செய்த நாள்

19 மே
2019
23:21

கடலாடி : கடலாடி, சாயல்குடி உள்ளிட்ட சுற்று வட்டார கிராமப்பகுதிகளில் புளிய முத்து அதிகளவு கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.



மிளகாய், பருத்தி, வேப்பமுத்து, சிறு, குறுதானியங்களைவாங்கி விற்கும் கமிஷன் கடைகளில் தற்போது புளிய முத்து அதிகளவில் சேகரிக்கப்பட்டு,மூடைகளாக அடுக்கி வைக்கப்பட்டுள்ளது.கோடையில் புளி சீசன் நிலவுவதால்,அதில் கிடைக்கும் புளியங்கொட்டை கிலோ 12 ரூபாய்க்கு விவசாயிகள், கிராம மக்கள்விற்பனை செய்கின்றனர்.கடலாடி புளியமுத்து மொத்த விற்பனையாளர் சேகரன் கூறியதாவது: புளிய முத்துவின் மூலம்கால்நடைகளுக்கான தீவனம் தயாரிக்க பெருமளவு செல்கிறது.



விருதுநகரில் இயங்கும் அட்டைப்பெட்டிகளுக்கான பசை தயாரிப்பிலும், நுடவைத்தியசாலைகளுக்கும் புளிய முத்துக்களை பெருமளவில் வெளியூர் வியாபாரிகள் வாங்கிச் செல்கின்றனர். சேகரிக்கப்பட்ட புளியமுத்துக்களை கிராமங்களில் உள்ள பெண்கள்,எங்களிடம் விலைக்கு தருகின்றனர். தற்போது புளிசீசன் கடந்தாண்டை காட்டிலும் விளைச்சல் உள்ளது, என்றார்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X