| காட்டெருமை தாக்கி உயிரிழந்த புலி Dinamalar
காட்டெருமை தாக்கி உயிரிழந்த புலி
Advertisement
 

பதிவு செய்த நாள்

19 மே
2019
23:22

கூடலுார்: முதுமலை புலிகள் காப்பகம், 'பப்பர்ஜோன்' சிங்கார வனச்சரகம், கல்மலை வனப்பகுதியில், வனவர் பீட்டர்பாபு தலைமையில், வேட்டை தடுப்பு காவலர்கள் நேற்று, காலை கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அங்கு, உடலில் காயத்துடன் பெண் புலி இறந்து கிடந்தது குறித்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.'பப்பர்ஜோன்' துணை இயக்குனர் ஜெயராஜ், வனச்சரகர் மாரியப்பன் மேற்பார்வையில், மசினகுடி கால்நடை டாக்டர் கோசலன், கூடலுார் ஆவின் டாக்டர் பாரத்ஜோதி ஆகியோர், புலியின் உடலை பிரேத பரிசோதனை செய்தனர்.வனத்துறையினர் கூறுகையில், 'இறந்த பெண் புலிக்கு ஆறு வயது. காட்டெருமை தாக்கியதில் பின் பகுதியில் காயம் ஏற்பட்டு, 3 நாட்களுக்கு முன்பு, உயிரிழந்துள்ளது.' என்றனர்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X