| சீமைகருவேல மரங்கள் சூழ்ந்த சுனாமி குடியிருப்பு வீடுகள் Dinamalar
சீமைகருவேல மரங்கள் சூழ்ந்த சுனாமி குடியிருப்பு வீடுகள்
Advertisement
 

பதிவு செய்த நாள்

19 மே
2019
23:22

ஆர்.எஸ்.மங்கலம், மே 20-

ஆர்.எஸ்.மங்கலம் அருகே பராமரிப்பு இன்றி சீமைகருவேல மரங்கள் சூழ்ந்து பயனற்ற நிலையில் உள்ள சுனாமி குடியிருப்பு வீடுகளை பராமரிக்க பயனாளிகள் வலியுறுத்தியுள்ளனர்.ஆர்.எஸ்.மங்கலம் உப்பூர் அருகே ஏ.மணக்குடியில் கடந்த 2010ல் சுனாமி குடியிருப்பு திட்டத்தின் கீழ் சுமார் 180 வீடுகள் கட்டப்பட்டன. கட்டப்பட்ட வீடுகளை அதிகாரிகள் வசதிபடைத்த வீடு உள்ளவர்களுக்கு ஒதுக்கீடு செய்ததால், இந்த வீடுகளில் பயனாளிகள் தங்காமல் பெரும்பாலான வீடுகள் பூட்டியே கிடந்தன. குடியிருப்பு வீடுகள் பயனற்ற நிலையில் சீமைகருவேல மரங்கள் சூழந்து தற்போது சிதிலமடைந்துள்ளது. குடியிருப்பு வீடுகளை கருவேல மரங்கள் சூழந்துள்ளதால் அப்பகுதியில் பாம்புகள் உள்ளிட்ட விஷ அந்துகள் நடமாட்டம் அதிகரித்துள்ளன. அப்பகுதியில் குடியிருப்போர் அச்சமடைந்துள்ளனர். அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சீமை கருவேல மரங்களை அகற்றம் செய்ய வேண்டும்.

 

Advertisement
மேலும் ராமநாதபுரம் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X