| விலை உயர்வால் கேரட் சாகுபடிக்கு ஆர்வம் Dinamalar
விலை உயர்வால் கேரட் சாகுபடிக்கு ஆர்வம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

19 மே
2019
23:22

கோத்தகிரி: கோத்தகிரி பகுதியில் தேயிலை விவசாயத்துக்கு அடுத்தபடியாக, மலை காய்கறி அதிக பரப்பளவில் பயிரிடப்படுகிறது. குறிப்பாக, கோத்தகிரி, நெடுகுளா, மிளிதேன், வ.உ.சி., நகர், கூக்கல்தொரை, கட்டபெட்டு உள்ளிட்ட பகுதிகளில் அதிக பரப்பளவில் கேரட் பயிரிடப்பட்டுள்ளன. விதை, உரம் மற்றும் பூச்சிகொல்லி மருந்து உள்ளிட்ட இடுபொருட்களின் விலை அதிகரித்துள்ள நிலையிலும், விவசாயிகள், கடன் பெற்று சாகுபடி செய்துள்ளனர்.கேரட் பயிரிட்டு ஒரு மாதம் முதல் இரண்டு மாதங்கள் வரை ஆகியுள்ள நிலையில், விவசாயிகள் களை எடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். தற்போது வறட்சி நிலவினாலும், வரும் நாட்களில் மழையை எதிர்நோக்கி, விவசாயிகள் அதிக அக்கறையுடன் தோட்டங்களை பராமரித்து வருகின்றனர்.தற்போது, மேட்டுப்பாளையம் மண்டிகளில் ஒரு கிலோ கேரட், 50 ரூபாய்க்கும், உள்ளூர் மார்க்கெட்களில், 60 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. செலவினங்களை கணக்கிட்டால், போதுமானதாக இல்லை என்றாலும், கடந்த காலங்களை ஒப்பிடுகையில், தற்போது கிடைத்து வரும் விலை,விவசாயிகளுக்கு ஓரளவு ஆறுதலாக அமைந்துள்ளது.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X