| பயிர்களுக்கு இழப்பீடு வழங்க வலியுறுத்தல் Dinamalar
பயிர்களுக்கு இழப்பீடு வழங்க வலியுறுத்தல்
Advertisement
 

பதிவு செய்த நாள்

19 மே
2019
23:26

ஆர்.எஸ்.மங்கலம் : ஆர்.எஸ்.மங்கலம் அருகே சாத்தனுார் குரூப்பிற்கு உட்பட்ட துவார், ராக்கினார்கோட்டை, கீழக்கோட்டை, பாண்டியனேந்தல், பாப்பானேந்தல் உள்ளிட்ட பகுதிகளுக்கு கடந்த ஆண்டிற்கான பயிர் காப்பீடு செய்தவர்களுக்கு இழப்பீடு தொகை வழங்கப்படவில்லை.சாத்தனுார் குரூப் விவசாயிகள் சார்பில் அதிகாரிகளிடம் பல முறை வலியுறுத்தியும் நடவடிக்கை இல்லை. சம்பந்தபட்ட உயர் அதிகாரிகள் இப்பகுதிக்கு பயிர்களுக்கான இழப்பீடு வழங்க நடவடிக்கையெடுக்க வலியுறுத்தியுள்ளனர்.



சாத்தனுாரை சேர்ந்த விவசாயி பொன்னுசாமி கூறுகையில், ''எங்களது பகுதிக்குட்பட்ட பல்வேறு கிராமங்களுக்கும் பயிர் இழப்பீட்டு தொகை வழங்கப்பட்டுள்ள நிலையில், சாத்தனுார் குரூப்பிற்கு மட்டும் முற்றிலும் இழப்பீட்டு தொகை வழங்காமல் விடுபட்டுஉள்ளது. கீழ்மட்ட அதிகாரிகள் முதல் மாவட்ட கலெக்டர் வரை கிராமத்தினர் சார்பில் பல முறை முறையிட்டும் எந்த நடவடிக்கையும் இல்லை. இழப்பீடு தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,''என்றார்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X