அடர் வனப்பகுதியில் அத்துமீறல்களை தடுக்க... அலட்சியம்! காட்சிப்பொருளாக கண்காணிப்பு கேமராக்கள்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 மே
2019
23:27

உடுமலை: வனத்தில் அத்துமீறல்களை கட்டுப்படுத்த பொருத்தப்பட்ட கேமராக்கள், காட்சிப்பொருளாக மாறியுள்ள நிலையில் வனத்துறையினரின் கண்காணிப்பும் குறைந்துள்ளதால், வனப்பாதுகாப்பு கேள்விக்குறியாக மாறியுள்ளது.



ஆனைமலை புலிகள் காப்பகத்துக்குட்பட்டது உடுமலை, அமராவதி வனச்சரகங்கள். உடுமலையிலிருந்து மறையூர் வழியாக மூணாறு செல்லும் ரோடு, இந்த இரு வனச்சரகங்களின் மையப்பகுதியில் செல்கிறது. ஒன்பதாறு செக்போஸ்ட் முதல் கேரளா சின்னாறு செக்போஸ்ட் வரை, 20க்கும் அதிகமான கி.மீ., துாரத்துக்கான ரோடு வனப்பகுதியில் அமைந்துள்ளது. இப்பகுதி, அரிய வகை மரங்கள் மற்றும் விலங்குகளின் வாழ்விடமாக உள்ளது. எனவே, வனத்துறை சார்பில், முன்பு, அத்துமீறல்களை தடுக்க பல்வேறு கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.



குறிப்பாக, காலை மற்றும் மாலை நேரங்களில், மூணாறு ரோட்டை கடந்து, அமராவதி அணைக்கு, யானை, மான் உட்பட விலங்குகள் செல்கின்றன. அப்போது, அவ்வழியாக வேகமாக செல்லும் வாகனங்களால், விலங்குகளுக்கு பாதுகாப்பில்லாத சூழல் காணப்பட்டது.மேலும், மூணாறுக்கு சுற்றுலா செல்வோர், வனப்பகுதியிலுள்ள ரோட்டில், தங்கள் வாகனங்களை நிறுத்தி விட்டு, மது அருந்துவது, புகை பிடிப்பது போன்ற அத்துமீறல்களில் ஈடுபட்டு வந்தனர்.



மேலும், பயன்படுத்திய பிளாஸ்டிக் பொருட்களை வனத்தில், வீசுவதும் அதிகரித்தது. தன்னார்வ குழுவினர், குறிப்பிட்ட நாட்களுக்கு, ஒரு முறை, டன் கணக்கில், மதுபாட்டில்கள், பிளாஸ்டிக் பொருட்களை வனப்பகுதியில் சேகரிக்கும், அளவுக்கு நிலைமை மோசமானது.கேமராக்கள் பொருத்தம்வனப்பகுதியில், அத்து மீறல்களை தடுக்க, புங்கன்ஓடை உட்பட இடங்களிலுள்ள கண்காணிப்பு கோபுரங்களில், சுழலும் கேமராக்கள் வனத்துறை சார்பில், பொருத்தப்பட்டன.



கேமரா பதிவுகளை, வனத்துறை செக்போஸ்ட் அலுவலகத்தில் இருந்தபடியே கண்காணித்து நடவடிக்கை எடுக்கப்பட்டது. இக்கேமராக்கள், 360 டிகிரி சுழலும் அமைப்புடையதால், அமராவதி அணைப்பகுதிக்குள் அத்துமீறி உள்ளே நுழைவோரையும் கண்காணிக்க முடிந்தது. வனப்பாதுகாப்பில் முக்கிய பங்கு வகித்த, இந்த கேமராக்கள் சமீபகாலமாக பழுதடைந்து, செயல்படாமல் உள்ளன. இதே போல், சின்னாறு செக்போஸ்ட் முதல் ஒன்பதாறு செக்போஸ்ட் வரை, வனத்துறையின் நடமாடும் குழுவினர் ரோந்து சென்று வந்தனர்.



அக்குழுவினர், வனவிலங்குகள் ரோட்டை கடக்கும் பகுதியில் நின்று, வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை அளித்து வந்ததுடன், அத்துமீறலில் ஈடுபட்டவர்களுக்கு அபராதமும் விதித்தனர். இக்குழுவினர் செயல்பாடுகளும் தற்போது முற்றிலுமாக முடங்கியுள்ளன.



சீரமைப்பது எப்போது?


வனப்பகுதியில் நிலவும் வறட்சி காரணமாக, தண்ணீருக்காக விலங்குகள் இடம்பெயர்ந்து வருவதுடன், வனத்தீ ஏற்படும் சூழல் பல இடங்களில் உள்ளது. வனத்துறை கண்காணிப்பு குறைந்துள்ள நிலையில், கோடை விடுமுறை சீசனுக்காக சுற்றுலா செல்பவர்கள், வனத்துக்குள் வாகனங்களை நிறுத்தி அத்துமீறலில் ஈடுபட்டு வருகின்றனர்.அசம்பாவிதங்கள் நடக்கும் முன்னர், கேமராக்களை சீரமைக்க வேண்டும். ரோந்து குழு அமைத்து, காலை மற்றும் மாலை நேரங்களில் மூணாறு ரோட்டில் ரோந்து செல்ல வேண்டும் என, இயற்கை ஆர்வலர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X