| தண்ணீர் இல்லாமல் தவிக்கும் புள்ளிமான்கள் Dinamalar
தண்ணீர் இல்லாமல் தவிக்கும் புள்ளிமான்கள்
Advertisement
 

பதிவு செய்த நாள்

19 மே
2019
23:29

திருவாடானை : திருவாடானை பகுதியில் நிலவும் கடும் வறட்சியின் காரணமாக தண்ணீருக்காக புள்ளி மான்கள் தவித்து வருகின்றன.திருவாடானை பகுதியில் உள்ள கண்மாய்களில் ஏராளமான மான்கள் உள்ளன. அஞ்சுகோட்டை, செங்கமடை, சிறுகம்பையூர், மங்களக்குடி, ஓரியூர் உட்பட பல கண்மாய்களில் ஏராளமான புள்ளிமான்கள் வசிக்கின்றன. பல ஆண்டுகளுக்கு முன்பு அரிதாக காணபட்ட மான்கள் தற்போது குடியிருப்புகளுக்குள் நுழையும் அளவிற்கு பெருகிவிட்டது.



கண்மாய்கள் முற்றிலும் வறண்டு விட்டதால் தண்ணீர் இல்லாமல் தவிக்கிறது.நேற்று செங்கமடை கிராமத்தில் உள்ள வயல்காட்டில் இரு மான்கள் தண்ணீருக்காக அலைவதை பொதுமக்கள் வேடிக்கையுடன் பார்த்தனர். இது குறித்து அக் கிராமத்தை சேர்ந்த சுந்தரபாண்டியன் கூறியதாவது: தண்ணீருக்காக மான்கள் கண்மாயை விட்டு வெளியேறும் போது நாய்களிடம் சிக்கி பலியாகிறது. ஆகவே மான்கள் வசிக்கும் கண்மாய்களில் ஆங்காங்கே தரை நீர் தேக்க தொட்டி வைக்கலாம். அரிய வகையான மான்களை பாதுகாக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்கவேண்டும், என்றார்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X