| டி.ஜி.பி., அலுவலகத்தில் தீ Dinamalar
டி.ஜி.பி., அலுவலகத்தில் தீ
Advertisement
 

பதிவு செய்த நாள்

19 மே
2019
23:29

சென்னை: மயிலாப்பூரில், டி.ஜி.பி., அலுவலக வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில், 'அம்பாசிடர்' கார் எரிந்து நாசமானது.


மயிலாப்பூரில் உள்ள, டி.ஜி.பி., அலுவலகத்தில், உளவுத்துறை, உளவு பிரிவு உள்ளிட்ட பிரிவுகள் இயங்கி வருகின்றன.இந்நிலையில், டி.ஜி.பி., அலுவலக வளாகத்தில், நேற்று காலை, 5:55 மணிக்கு, உளவு பிரிவு போலீசார் பணியாற்றி வரும், கட்டடத்தின் பின்புறம் நிறுத்தப்பட்டு இருந்த, போலீசாரின் அம்பாசிடர் கார் ஒன்று, திடீரென தீப்பற்றி எரிந்தது.இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்த, மயிலாப்பூர் மற்றும் தேனாம்பேட்டை தீயணைப்பு வீரர்கள், மற்ற இடங்களுக்கு, தீ பரவாமல் தடுத்து நிறுத்தினர்.உரிய நேரத்தில் தீ அணைக்கப்பட்டதால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. கார், முற்றிலும் எரிந்து, நாசமானது.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X