| போலீஸ் டைரி Dinamalar
போலீஸ் டைரி
Advertisement
 

பதிவு செய்த நாள்

19 மே
2019
23:30

போதை பொருள் விற்றவன் கைது





ராயபுரம்: ராயபுரத்தைச் சேர்ந்தவன், சித்திக், 31; கறிக்கடை ஊழியர். கோவாவில் இருந்து, 'மெத்தாபெட்டமின்' எனும் போதை பொருளை வாங்கி வந்து, வாடிக்கையாளர்களுக்கு, விற்று வந்துள்ளான். தகவல் அறிந்த, போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார், நேற்று, அவனை கைது செய்து, 60 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள, 4 கிராம் மெத்தாபெட்டமினை பறிமுதல் செய்தனர்.ரூ.40 ஆயிரம் திருட்டுஅயனாவரம்: அயனாவரம், பாளையம் பிள்ளை நகரைச் சேர்ந்தவர், கோபி, 47; மளிகைக்கடை வியாபாரி. நேற்று காலை, கடையை திறக்க சென்றபோது, கடையின் பூட்டை உடைத்து, கல்லாவில் இருந்த, 40 ஆயிரம் ரூபாயை, மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரிந்தது. அயனாவரம் போலீசார் விசாரிக்கின்றனர்



.செயின் பறித்தவன்கள் கைது



தாம்பரம்: பூந்தமல்லி, நசரத்பேட்டை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில், சமீபமாக, பெண்களிடம் செயின் பறிப்பு சம்பவங்கள், அடிக்கடி நடந்தன. தொடர்ந்து, குற்றவாளிகளை பிடிக்க, நசரத்பேட்டை போலீசார் தனிப்படை அமைத்து, விசாரித்து வந்தனர். இதில், சூளைமேடைச் சேர்ந்த, ராகேஷ்குமார், 20, நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த, குமார், 20, கோடம்பாக்கத்தைச் சேர்ந்த, முகமது ஆசிக், 21, உட்பட, ஐந்து பேர், செயின் பறிப்பில் ஈடுபட்டது தெரிந்தது. அவர்களை, நேற்று கைது செய்த போலீசார், 20 சவரன் நகை மற்றும் இரண்டு இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.



ஆட்டோ ஓட்டுனர் மர்ம மரணம்



தாம்பரம்: பூந்தமல்லி அடுத்த நசரத்பேட்டை, காமராஜர் சாலையை சேர்ந்தவர், ரவி, 45; ஆட்டோ ஓட்டுனர். நேற்று காலை, வீட்டின் அருகே உள்ள, தனியார் மருத்துவமனையின் வெளிப்புறத்தில், துாக்கில் தொங்கிய நிலையில், சடலமாக கிடந்தார். உடலை மீட்ட, நசரத்பேட்டை போலீசார், கொலையா, தற்கொலையா என, விசாரிக்கின்றனர்.லாட்டரி விற்றவன்கள் கைதுசெங்குன்றம்: செங்குன்றம் அடுத்த நல்லுாரைச் சேர்ந்த மணிவாசகம், 45. அழிஞ்சிவாக்கத்தைச் சேர்ந்த நாகராஜ், 45, ஆகியோர், செங்குன்றம் அரிசி மார்க்கெட் அருகே, தடை செய்யப்பட்ட, லாட்டரி சீட்டு விற்றனர். அவர்களை கைது செய்த போலீசார், விசாரிக்கின்றனர்.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X