சத்துணவு மையங்களுக்கு பப்பாளி மரக்கன்று திட்டம்; நூறு சதவீதம் நிறைவேற்ற எதிர்பார்ப்பு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 மே
2019
23:31

உடுமலை : சத்துணவு மற்றும் அங்கன்வாடி மையங்களுக்கான பப்பாளி மற்றும் முருங்கை மரக்கன்றுகள் வழங்கும் திட்டத்தை, நடப்பாண்டில் நுாறு சதவீதம் நிறைவேற்ற வேண்டுமென எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.



அங்கன்வாடி மற்றும் சத்துணவு மையங்களில், குழந்தைகளுக்கு, சத்துள்ள உணவு வகைகளை வழங்க அரசு புதிய திட்டத்தை நடைமுறைப்படுத்தியது. குறிப்பாக, அங்கன்வாடி மையங்களில், குழந்தைகளுக்கு இரும்புச்சத்து மிகுந்த உணவுகளை, அதிகரித்து வழங்க வேண்டுமென, அரசு திட்டமிட்டது.இதன் அடிப்படையில், சத்துணவு மற்றும் அங்கன்வாடி மையங்களுக்கு, இலவசமாக, பப்பாளி மற்றும் முருங்கை மரக்கன்றுகள் வழங்குவதாக, அறிவிக்கப்பட்டது. தோட்டக்கலைத்துறையின் சார்பில், ஒவ்வொரு மையங்களுக்கும், கன்றுகள் வழங்கப்படுகிறது.



இவற்றை, பராமரித்து, அதில் வரும், காய், கனி, முருங்கை கீரைகளை, குழந்தைகளுக்கு உணவாக தயார்படுத்தித் தர வேண்டுமெனவும், அரசு உத்தரவிட்டது.இத்திட்டம், கடந்த கல்வியாண்டின் துவக்கத்தில் அறிவிக்கப்பட்டது. இருப்பினும், உடுமலை கல்வி மாவட்டத்தில், பல மையங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்படவில்லை.திட்டத்தை செயல்படுத்துவதில் தாமதம் ஏற்படுவதற்கு, மாவட்ட தோட்டக்கலைத்துறையும், சமூக நலத்துறையும் மாறிமாறி புகார் கூறிக்கொள்வதால், சம்பந்தபட்ட துறை அலுவலர்களும், திட்டத்தில் தீவிரம் காட்டவில்லை.



மேலும், இடவசதி இருப்பினும், பல மையங்களில் இந்த மரக்கன்றுகள் இல்லை. குழந்தைகளுக்கான சிறப்பு திட்டத்தை செயல்படுத்துவதில், அரசுத்துறைகள் அலட்சியமாக இருப்பது பெற்றோரையும் வேதனையடையச்செய்கிறது.வரும் புதிய கல்வியாண்டில், விடுபட்ட சத்துணவு மற்றும் அங்கன்வாடி மையங்களை ஆய்வு செய்து, அங்கும் மரக்கன்றுகளை நட வேண்டும் எனவும், நுாறு சதவீதம் திட்டத்தை செயல்படுத்த வேண்டுமென பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X