| கருவண்ணராயர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் Dinamalar
கருவண்ணராயர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

19 மே
2019
23:32

உடுமலை: உடுமலை, தாராபுரம் ரோடு, வீரசுந்தரி சமேத கருவண்ணராயர் கோவிலில், திருவிழா, கடந்த 7ம் தேதி நோன்பு சாட்டுதலுடன் துவங்கியது. இன்று, காலை, 9:00 மணிக்கு திருமூர்த்திமலையிலிருந்து கருவண்ணராயர் கோவிலுக்கு தீர்த்தம் எடுத்து வருகின்றனர்.நாளை, தீர்த்தம் மாரியம்மன் கோவிலில் வைத்து வழிபாடு நடத்துகின்றனர். அலகு குத்துதல் வேண்டுதல் வழிபாடும் நடக்கிறது. மாலை, 5:00 மணிக்கு சக்தி அழைத்தல், பொங்கல் வைக்கும் நிகழ்ச்சியும் இடம்பெறுகின்றன.வரும் 22ம் தேதி, காலை, கணபதி ேஹாமம், தொடர்ந்து, கருவண்ணராயர் சுவாமி மற்றும் வீரசுந்தரி அம்பாளுக்கும், திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. காலை, 11:00 மணிக்கு, மாவிளக்கு மற்றும் முளைப்பாரி எடுக்கின்றனர். தொடர்ந்து, சுவாமிகள் சிறப்பு அலங்காரத்துடன் திருவீதி உலா நடக்கிறது.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X