| அனல் காற்றுடன் கொளுத்தும் வெயில்; பொதுமக்கள் கடும் பாதிப்பு Dinamalar
அனல் காற்றுடன் கொளுத்தும் வெயில்; பொதுமக்கள் கடும் பாதிப்பு
Advertisement
 

பதிவு செய்த நாள்

19 மே
2019
23:33

உடுமலை: அனல் காற்றுடன், பகலில் கொளுத்தும் வெயிலால், உடுமலை பகுதியில் அனைத்து தரப்பினரும் பாதித்துள்ளனர்.



உடுமலை சுற்றுப்பகுதியில், வடகிழக்கு பருவமழை போதியளவு பெய்யாததால், கோடை மழைப்பொழிவு குறித்து அதிக எதிர்பார்ப்பு இருந்தது. திருப்பூர் மாவட்டத்தில், பரவலாக வெப்பச்சலனம் உட்பட காரணங்களால், மழை பெய்தாலும், உடுமலைக்கு மழை இதுவரை கைகொடுக்கவில்லை.கடந்த சில நாட்களாக மாலை நேரத்தில், மேகமூட்டத்துடன், இடி, மின்னல், காணப்பட்டாலும், நகரம் மற்றும் சுற்றுப்பகுதியில் மழை பெய்யவில்லை. கிராமப்புறங்களில் மட்டும், ஆங்காங்கே மழை பெய்துள்ளது.நேற்றுமுன்தினம் காலை நிலவரப்படி, பெதப்பம்பட்டியில், 15 மி.மீ., குண்டடம் கள்ளிப்பாளையம், 18 மி.மீ., உப்பாறு, 25 மி.மீ., மற்றும் திருமூர்த்தி அணைப்பகுதியில், 5.6 மி.மீ., மழை பதிவாகியிருந்தது.நேற்று காலை முதலே வெப்பத்தின் தாக்கம் அதிகமிருந்தது. பகலில், அனல் காற்றுடன், வெயிலும் அதிகரித்து காணப்பட்டதால், நெடுஞ்சாலையில் பயணிக்க இரு சக்கர வாகன ஓட்டிகள் திணறினர்.திருமூர்த்திமலை, அமராவதி அணை உட்பட சுற்றுலா தலங்களுக்கு வந்த சுற்றுலா பயணிகளும் வெயில் அதிகம் இருந்ததால், பாதிக்கப்பட்டனர்.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X