மேட்டுப்பாளையத்தில் மறுஓட்டுப்பதிவு, 'விறுவிறு': 82.75 சதவீத ஓட்டுகள் பதிவு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 மே
2019
23:34

ஆவடி: மேட்டுப்பாளையம் மறுஓட்டுப் பதிவில், கடந்த முறையை விட, 10 ஓட்டுகள் அதிகமாக பதிவாகியுள்ளன.



தமிழகத்தில், ஏப்., 18ல், லோக்சபா தேர்தல் மற்றும் 18 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடந்தது.இதில், திருவள்ளூர் லோக்சபா தொகுதியில், 71.68 சதவீத ஓட்டுகளும்; பூந்தமல்லி சட்டசபை தொகுதியில், 76.80 சதவீத ஓட்டுகளும் பதிவாகின.குளறுபடிஆனால், இந்த தொகுதிக்குட்பட்ட, மேட்டுப்பாளையம் கிராமம், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் உள்ள, 195வது ஓட்டுச்சாவடியில், ஓட்டுப்பதிவில் குளறுபடி ஏற்பட்டதாக புகார்கள் எழுந்தன.




இதனால், தேர்தல் ஆணையம், இந்த ஓட்டுச்சாவடி உட்பட, தமிழகத்தில் உள்ள, 13 ஓட்டுச்சாவடிகளுக்கு, மறுஓட்டுப்பதிவு நடத்த உத்தரவிட்டது.அதன்படி, நேற்று காலை, 195வது ஓட்டுச்சாவடியில் உள்ள, 1,049 வாக்காளர்களுக்கு, மறுஓட்டுப்பதிவு துவங்கியது.ஓட்டுப்பதிவு துவங்கும் நேரத்திற்கு, அரை மணி நேரம் முன், வாக்காளர்கள் ஆர்வமுடன் வந்து, ஓட்டுச்சாவடி முன் காத்திருந்தனர். ஆனால், இயந்திரங்கள் குளறுபடியால், 12 நிமிடங்கள், தாமதமாக ஓட்டுப்பதிவு துவங்கியது.மாலை, 6:00 மணி நிலவரப்படி, 82.75 சதவீத ஓட்டுகள் பதிவாகின. கடந்த முறை பதிவான ஓட்டுகளை விட, நேற்று, 10 ஓட்டுகள் அதிகமாகி, 868 ஓட்டுகள் பதிவாகியுள்ளன.



ராணுவ பாதுகாப்பு





திருவள்ளூர் லோக்சபா தேர்தல் பொதுப்பார்வையாளர் சுரேந்திரகுமார், பூந்தமல்லி சட்டசபை தேர்தல் பொதுப்பார்வையாளர் ஷோபா ஆகியோர், ஓட்டுப்பதிவை கண்காணித்தனர். துப்பாக்கி ஏந்திய துணை ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.சிறு தவறுகளால், மறுஓட்டுப் பதிவு நடக்கிறது. இம்முறை அவற்றை தடுக்க, தேர்தல் ஆணையம் கண்காணிப்பு கேமராக்களால், நேரலையில் கண்காணித்தது.மகேஸ்வரி ரவிக்குமார்மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்



வேட்பாளர்கள் விபரம்



திருவள்ளூர் லோக்சபா தொகுதியில், அ.தி.மு.க.,- சார்பில், வேணுகோபால்; காங்கிரஸ்- சார்பில், ஜெயகுமார், அ.ம.மு.க.,- சார்பில், பொன்.ராஜா உட்பட, 20 பேர் போட்டியிடுகின்றனர்.பூந்தமல்லி சட்டசபை தொகுதியில், அ.தி.மு.க., சார்பில், -வைத்தியநாதன்; தி.மு.க., சார்பில், -கிருஷ்ணசாமி; அ.ம.மு.க.,- சார்பில், ஏழுமலை உட்பட, 13 பேர் போட்டியிடுகின்றனர். 'டாஸ்மாக்' மூடினால் என்ன?தேர்தல் நடத்தை விதிமுறையின்படி, பூந்தமல்லி சட்டசபை தொகுதிக்குட்பட்ட பகுதிகளில், நேற்று, 'டாஸ்மாக்' கடைகள் அடைக்கப்பட்டன. இதுகுறித்து, மதுபிரியர் ஒருவர் கூறுகையில், 'ஆவடி அருகே தான், மேட்டுப்பாளையம் உள்ளது. மேட்டுப்பாளையத்தில் கடையை மூடியதால், எந்த சிரமமும் இல்லை. ஆவடிக்கு சென்று, மது வாங்கினோம்' என்றார்.

 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X