மரத்தை காயப்படுத்திய விளம்பர பலகைகள் அகற்றம்; தன்னார்வ அமைப்பினர் நடவடிக்கை
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 மே
2019
23:36

உடுமலை: மரங்களை காயப்படுத்தி, அழிக்கும் வகையில், விளம்பர பலகைகளுக்காக அடிக்கப்பட்ட ஆணிகளை தன்னார்வ அமைப்பினர் நேற்று அகற்றினர்.



உடுமலை பகுதியிலுள்ள பெரும்பாலான ரோடுகளுக்கு பல்வேறு மரங்கள் அழகு சேர்ப்பவையாக உள்ளன. குறிப்பாக, உடுமலை-திருமூர்த்திமலை, அமராவதி, பொள்ளாச்சி, ஆனைமலை, தாராபுரம் உட்பட ரோடுகளில், இருபுறங்களிலும், மரங்கள் செழித்து வளர்ந்துள்ளன.



புளியன், மயில்கொன்றை, பனை உட்பட மரங்கள் இப்பகுதியில், அதிகளவு உள்ளன. இந்நிலையில், விதிகளை மீறி, ரோட்டோர மரங்களில், ஆணியடித்து விளம்பர பலகைகளை தொங்க விடுவது அதிகரித்தது. பெரிய ஆணிகளால், மரப்பட்டைகளில் ஏற்படும் பாதிப்பு அதிகரித்து மரங்களே காயும் நிலை பல இடங்களில், உருவானது.



இது குறித்து, 'தினமலர்' நாளிதழில், 'மரங்களில் ஆணியடித்து கொலை!' என்ற தலைப்பில், செய்தி வெளியானது. இதையடுத்து, நேற்று, மரம்-சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பினர், ரோட்டோர மரங்களில், ஆணியை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். ஆனைமலை ரோட்டில், தேவனுார்புதுாரில் துவங்கி, முக்கோணம் வரையிலுள்ள, மரங்களில், ஆயிரக்கணக்கான ஆணிகளை அந்த அமைப்பினர் அகற்றினர். மரங்களை பாதுகாக்கும் பணியில், தன்னார்வத்துடன் ஈடுபட்ட அந்த அமைப்பினருக்கு, அப்பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X