'சைனீஸ்' உணவு தயாரிக்க இலவச பயிற்சி
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 மே
2019
23:36

ஏழை பெண்கள், படிப்பை பாதியில் நிறுத்தியவர்கள், சுய தொழில் துவங்க வசதியாக, 'வின்னர்ஸ் பேக்கரி' சார்பில், ஊக்கத் தொகையுடன், 'சைனீஸ்' உணவு வகை தயாரிக்க, இலவச பயிற்சி வழங்கப்பட உள்ளது.



சென்னை மாநகராட்சி, 'ஹாட் பிரட்' நிறுவனம், ரோட்டரி கிளப் இணைந்து, சென்னை, ஆழ்வார்பேட்டை, மாநகராட்சி சமுதாய கல்லுாரி வளாகத்தில், 2005ல், பேக்கரி பொருட்கள் தயாரிக்கும் தொழில் பயிற்சி மையத்தை துவக்கின.செய்முறை பயிற்சிஅங்கு, படிப்பை பாதியில் நிறுத்தியவர்களுக்கு, கேக், ரொட்டி, பிஸ்கட் உள்ளிட்ட, பேக்கரி பொருட்கள் தயாரிக்கும் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.இதனால், படிப்பை கைவிட்டவர்கள், தவறான பாதையில் செல்வது தடுக்கப்பட்டது. எந்த பயிற்சி நிறுவனத்திலும் இல்லாத வகையில், பேக்கரி தொழில் பயிற்சி மையத்தில், முழுமையாக, செய்முறை வாயிலாக, அனைத்து பயிற்சிகளும் வழங்கப்படுகின்றன.



இதனால், அந்த மையத்தில் பயிற்சி பெறுவோர், விரைவாக பேக்கரி பொருட்களை தயாரிக்க கற்றுக் கொள்கின்றனர்.பயிற்சியில் பங்கேற்பவர்களுக்கு, மூன்று வேலை உணவு, பஸ் பாஸ், இலவசமாக வழங்குவதுடன், மாதம், 5,000 ரூபாய் ஊக்கத் தொகை வழங்கப்படுகிறது. பயிற்சியின் போது தயாரிக்கப்படும் பேக்கரி பொருட்கள் வீணாவதை தடுக்க, அந்த வளாகத்தில், 'வின்னர்ஸ் பேக்கரி' துவக்கப்பட்டுள்ளது.அங்கு, பயிற்சியில் பயன்படுத்தப்படும், தரமான பொருட்களை சேர்த்து தயாரிக்கப்படும் பேக்கரி பொருட்கள் விற்கப்படுகின்றன.இங்கு, தினமும், 75 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள, பேக்கரி பொருட்கள் விற்பனையாகின்றன.



இது, பண்டிகை காலங்களில் அதிகரிக்கிறது.பயிற்சி மையம் துவங்கியதில் இருந்து, பேக்கரி ஊழியர்கள் சம்பளம்; மாவு, சாக்லேட் உள்ளிட்ட உற்பத்தி பொருட்கள் உள்ளிட்ட செலவினங்கள் போக, வின்னர்ஸ் பேக்கரி, இதுவரை, 3 கோடி ரூபாய்க்கு மேல் லாபம் ஈட்டியுள்ளது.அந்த தொகை முழுவதும், சென்னை மாநகராட்சி மற்றும் ரோட்டரி கிளப் சார்பில் மேற்கொள்ளப்படும், ஏழை மக்களின் நலத்திட்ட பணிகளுக்கு செலவிடப்பட்டு உள்ளன. இதுவரை, பயிற்சி மையத்தில், 500க்கும் மேற்பட்டவர்கள், பேக்கரி தொழிலை கற்றுள்ளனர். அதில், 400 பேர், 'ஹாட் பிரட்' மற்றும் அதை சார்ந்த நிறுவனங்களில், பணிபுரிந்து வருகின்றனர்.



சமையல் சாதனங்கள்





இந்நிலையில், நாட்டில் தற்போது, 'சைனீஸ்' உணவு வகைக்கு, அதிக வரவேற்பு காணப்படுகிறது. இதனால், வின்னர்ஸ் பேக்கரி உள்ள தொழிற்பயிற்சி மைய வளாகத்தில், சைனீஸ் உணவு வகைகள் தயாரிக்கும் பயிற்சி மையம், தனியாக துவக்கப்பட்டு உள்ளது.இதற்காக, 10 லட்சம் ரூபாய் செலவில், நவீன சமையல் சாதனங்கள் வாங்கப்பட்டுள்ளன. அங்கு, சர்வதேச சைனீஸ் உணவகங்களில் பணிபுரிந்த, சிறந்த சமையல் கலைஞர்கள் வாயிலாக, சைனீஸ் சைவ, அசைவ உணவு வகைகள், ஆரோக்கியமான முறையில், தனித்தனியாக தயாரிக்க பயிற்சி வழங்கப்பட உள்ளது.அதில் பங்கேற்க, ஏழை பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட உள்ளது. மாணவர்கள், படிப்பை கைவிட்டவர்கள் என, ஏழ்மை நிலையில் உள்ளவர்கள், பயிற்சியில் பங்கேற்கலாம்.அவர்களுக்கு, பயிற்சியின் போது, மூன்று வேலை உணவு, இலவச பயணச்சீட்டு இலவசமாக வழங்குவதுடன், மாதம், 5,000 ரூபாய் ஊக்கத் தொகை வழங்கப்பட உள்ளது.



மேலும், சைனீஸ் உணவு தயாரிப்பில், ஆர்வம் உள்ள வசதியானவர்களும், பயிற்சியில் பங்கேற்கலாம். அவர்களுக்கு, குறைந்த கட்டணம் வசூலிக்கப்படும். அவர்கள் செலுத்தும் தொகை, நலத்திட்டங்களுக்கு செலவிடப்பட உள்ளது.பயிற்சியின் போது தயாரிக்கும் உணவு வகைகளை, அதை செய்தவர்கள் வீட்டிற்கு, 'பார்சல்' எடுத்து செல்லலாம்.'மொபைல் ஆப்'பயிற்சியில் பங்கேற்றவர்கள், சைனீஸ் உணவு தயாரிக்க கற்றுக் கொள்வதுடன், சொந்தமாக உணவகம் ஆரம்பிக்க, அரசிடம் அனுமதி பெறுவது எப்படி என்பது உள்ளிட்டவை தொடர்பாகவும், ஆலோசனைகள் வழங்கப்பட உள்ளன.



தற்போது, பல நிறுவனங்கள், 'மொபைல் ஆப்' எனப்படும் செயலி வாயிலாக, உணவு பொருட்களை, 'டெலிவரி' செய்யும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றன.இதனால், பலரும், தங்கள் விரும்பிய உணவுகளை, விரும்பிய உணவகத்தில் இருந்து, மொபைல் செயலி வாயிலாக, 'ஆர்டர்' தருகின்றனர்.பயிற்சியில், சைனீஸ் உணவு தயாரிக்க கற்றுக் கொள்வோர், உணவகங்களில், வேலைக்கு சேரலாம். மேலும், சிறிய முதலீட்டில், சொந்தமாக உணவகத்தை துவக்கி, உணவு டெலிவரி செய்யும் நிறுவனங்கள் வாயிலாக, தங்கள் தயாரிப்புகளை விற்பனை செய்யலாம்.சைனீஸ் உணவு தயாரிக்கும் பயிற்சியில் பங்கேற்க விரும்புவோர், பாலசுப்ரமணியன், சித்திக் ஆகியோரிடம், 99625 28101, 99625 28108 என்ற மொபைல் எண்களில், கூடுதல் விபரங்களை பெறலாம்.



நவீன கருவிகள்!



பேக்கரி பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி மையத்திற்கு, 'ஹாட் பிரட்' நிறுவனத்தின் நிறுவனர், எம்.மகாதேவன், பிரான்ஸ், இத்தாலி நாடுகளில் இருந்து, 15 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, நவீன இயந்திரங்களை வாங்கிக் கொடுத்துள்ளார்.இது போன்ற இயந்திரங்கள், நட்சத்திர ஓட்டல்கள், சொகுசு கப்பல்களில் உள்ள பேக்கரி தயாரிப்பு கூடங்களில் தான் உள்ளன.இதனால், பயிற்சி மையத்தில், பயிற்சிபெறும் மாணவர்கள், நட்சத்திர ஓட்டல் உட்பட, எங்கு வேலைக்கு சென்றாலும், அங்குள்ள இயந்திரங்களை கண்டு அச்சப்படாமல், சுலபமாக கையாளும் ஆற்றலை பெறுகின்றனர்.



- நமது நிருபர் -

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X