| தொழிற்பயிற்சி சேர்க்கை 31ம் தேதி கடைசி நாள் Dinamalar
தொழிற்பயிற்சி சேர்க்கை 31ம் தேதி கடைசி நாள்
Advertisement
 

பதிவு செய்த நாள்

19 மே
2019
23:37

சென்னை:திருவள்ளூர் மாவட்ட தொழிற்பயிற்சி நிலையங்களில், தொழிற் பிரிவுகளுக்கான, மாவட்ட கலந்தாய்வு முறை சேர்க்கைக்கு, 31ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.திருவள்ளூர் மாவட்டத்திற்கு உட்பட்ட, அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில், தொழிற் பிரிவுகளுக்கான, மாவட்ட கலந்தாய்வு முறை சேர்க்கைக்கு, சென்னை மாவட்டத்தை சேர்ந்த, 8, 10 மற்றும் பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற, மாணவ - மாணவியர் விண்ணப்பிக்கலாம்.இது குறித்த தகவல்களை, www.skilltraining.tn.gov.in இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.அம்பத்துார் அரசினர் தொழிற்பயிற்சி நிலைய, துணை இயக்குனர் அல்லது முதல்வரை, நேரிடையாகவோ, 044 - 2625 2453 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம்.இந்த தகவலை, சென்னை கலெக்டர் சண்முக சுந்தரம் தெரிவித்துள்ளார்.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X