| அங்கீகாரம் பெறாத பள்ளிகள் எத்தனை? ஆய்வில் இறங்கியது அதிகாரிகள் குழு Dinamalar
அங்கீகாரம் பெறாத பள்ளிகள் எத்தனை? ஆய்வில் இறங்கியது அதிகாரிகள் குழு
Advertisement
 

பதிவு செய்த நாள்

19 மே
2019
23:38

திருப்பூர்: திருப்பூரில்அங்கீகாரம் பெறாதமற்றும் உரிம புதுபிப்பு செய்து கொள்ளாதபள்ளிகள் குறித்தவிபரம் சேகரித்து, வரும், 22ம் தேதிக்குள் அனுப்ப, பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.



தனியார் பள்ளிகளுக்கு, தொடர்நிலை மற்றும் ஆண்டுதோறும் புதுப்பித்தல் ஆகிய இரு பிரிவு களில், பள்ளிக்கல்வித்துறை அங்கீகாரம் வழங்குகிறது. பள்ளியின் உள்கட்டமைப்பு வசதிகளை ஆய்வு செய்யும் கல்வித்துறை அதிகாரிகள் குழு, அங்கீகார சான்றிதழ் வழங்க, பரிந்துரை செய்கின்றனர். இச்சான்றிதழ் பெறாத, உரிமம் புதுப்பிப்பு செய்து கொள்ள தவறிய பள்ளிகள், அங்கீகாரம் பெறாத பள்ளிகளாக வகைப்படுத்தப்படுகிறது.மாநிலம் முழுக்க, 709 பள்ளிகள் அங்கீகாரம் பெறாமல் செயல்படுவது கண்டறியப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் அங்கீகாரம் பெறாத, உரிமம் புதுப்பிக்காத பள்ளிகளை கண்டறிய மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.



இந்நிலையில், அங்கீகாரம் இல்லாமலும், அங்கீகார எண்ணை போலியாக தயாரித்தும், சில பள்ளிகள் முறைகேடாக செயல்பட்டு வருவதாக அவ்வப்போது புகார் எழுகிறது.இதைத் தொடர்ந்து, மழலையர், அரசு நிதியுதவி பெறும், சுயநிதி, மெட்ரிக்குலேசன் பள்ளிகளில், அந்தந்த மாவட்ட சி.இ.ஒ., ஆய்வு செய்யவும், இம்மாதம், 22ம் தேதிக்குள் பள்ளி கல்வித்துறைக்கு ஆய்வறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளதால், இன்றும், நாளையும் அங்கீகாரம் பெறாத பள்ளிகள் குறித்து, மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்த உள்ளனர். ஆய்வின் முடிவில், திருப்பூர் மாவட்டத்தில் அங்கீகாரம் பெறாத பள்ளிகள் எத்தனை என்ற விபரம் தெரிய வரும்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X