| ஜூன் 7ல் வழக்கறிஞர் சங்க தேர்தல் Dinamalar
ஜூன் 7ல் வழக்கறிஞர் சங்க தேர்தல்
Advertisement
 

பதிவு செய்த நாள்

19 மே
2019
23:39


சென்னை: சென்னை, ஜார்ஜ் டவுன் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க தேர்தல், ஜூன், ௭ம் தேதி நடத்தப்படும் என, தமிழ்நாடு பார் கவுன்சில் தெரிவித்துள்ளது.ஜார்ஜ் டவுன் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க தேர்தல், 2019 ஏப்., 5ம் தேதி நடப்பதாக அறிவிக்கப்பட்டது. செயலர் பதவிக்கு, வழக்கறிஞர், எம்.ஆறுமுகம் வேட்புமனு தாக்கல் செய்தார். 'பார் கவுன்சிலில் பதிவு செய்ததற்கான சீனியாரிட்டி இல்லை' என, அவரது வேட்புமனு நிராகரிக்கப்பட்டது.இதை எதிர்த்து, பார் கவுன்சிலில், ஆறுமுகம் மனு தாக்கல் செய்தார்.இதை, பார் கவுன்சிலின் பதிவுக்குழு சார்பில், மூத்த வழக்கறிஞர், ஆர்.சிங்காரவேலன், வழக்கறிஞர், என்.சந்திரசேகரன் ஆகியோர் விசாரித்து, பிறப்பித்த உத்தரவு:வழக்கறிஞர் ஆறுமுகம் உள்ளிட்டோர், தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றதைத் தொடர்ந்து, தற்காலிக நீக்கம், ரத்து செய்யப்பட்டது. சீனியாரிட்டிக்காக, தொடர்ந்து, 'பிராக்டீஸ்' செய்வதாக கருதப்படுவர். தேர்தலில் போட்டியிட, அவர்களை அனுமதிக்க, இது ஏதுவாகும்.ஜூன், ௭ம் தேதி, ஜார்ஜ் டவுன் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க தேர்தல் நடத்தப்படும்.அநாகரிகமான முறையில், தகவல் பரிமாற்றம், வேட்பாளர்களின் நடத்தை பற்றி அவதுாறாக செய்தி வெளியிடுவது போன்றவற்றில், வழக்கறிஞர்கள் ஈடுபடக் கூடாது.நீதிமன்ற வளாகத்தில், அதைச் சுற்றிய பகுதிகளில், துண்டுப் பிரசுரங்கள் வினியோகிக்கக் கூடாது; சுவரொட்டி, விளம்பர தட்டி வைக்கக் கூடாது. வழக்கறிஞர்கள் யாரும், அநாகரிகமான முறையில் நடந்து கொண்டதாக, தேர்தல் அதிகாரிகள் புகார் அளித்தால், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு, உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X