| ரயில் பயணிகள் கவனத்துக்கு... பயண நேரத்தில் மாற்றம் Dinamalar
ரயில் பயணிகள் கவனத்துக்கு... பயண நேரத்தில் மாற்றம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

19 மே
2019
23:39

திருப்பூர் : 'கோவை - நாகர்கோவில் பாசஞ்சர், நாளை, ஈரோடு வரை மட்டுமே இயக்கப்படும்' என, சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.



ஈரோடு - கரூர் - திருச்சி மார்க்கத்தில் பொறியியல் மேலாண்மை பணி நடப்பதால், நாளை (21ம் தேதி) கரூர் - திருச்சி பாசஞ்சர், மறுமார்க்கமாக திருச்சி - கரூர் பாசஞ்சர் ரத்து செய்யப்படுகிறது. கோவை - நாகர்கோவில் பாசஞ்சர் (56320) ஈரோடு வரை மட்டுமே இயக்கப்படும். மறுமார்க்கமாக இந்த ரயில், திண்டுக்கல்லில் இருந்து பயணத்தை துவக்கும்.



பாலக்காடு டவுன் - திருச்சி பாசஞ்சர் ரயில், ஈரோடு வரை மட்டுமே இயங்கும். ஈரோடு - திருநெல்வேலி பாசஞ்சர் ரயில், கரூரில் இருந்து பயணத்தை துவக்கும். மறுமார்க்கமாக கரூர் வரை மட்டுமே இயங்கும். திருச்சி - ஈரோடு பாசஞ்சர் ரயில், கரூர் வரை மட்டுமே இயக்கப்படும். ஈரோடு - ஜோலார்பேட்டை பாசஞ்சர் ரயில் (56846) சேலத்தில் இருந்து இயங்கும் என, சேலம் ரயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X