| 5 மாதத்தில் ஒரே ஒரு கட்டடத்துக்கு, 'சீல்' Dinamalar
5 மாதத்தில் ஒரே ஒரு கட்டடத்துக்கு, 'சீல்'
Advertisement
 

பதிவு செய்த நாள்

19 மே
2019
23:40

சென்னை பெருநகர் பகுதியில், ஜனவரி முதல் தற்போது வரை, ஒரு விதிமீறல் கட்டடத்துக்கு மட்டுமே, சி.எம்.டி.ஏ., அமலாக்கப்பிரிவு அதிகாரிகள், 'சீல்' வைத்துள்ளனர்.நகர், ஊரமைப்பு சட்டப்படி, விதிமீறல் கட்டடங்களுக்கு, சீல் வைக்கும் பொறுப்பு, சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமமான, சி.எம்.டி.ஏ.,வின், அமலாக்கப்பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.




சீல் வைக்கப்படும் விதிமீறல் கட்டடங்களின் எண்ணிக்கை, ஆண்டுக்கு ஆண்டு குறைந்து வருகிறது. சி.எம்.டி.ஏ., இணையதளத்தில், அதிகாரப்பூர்வமாக பதிவிடப்பட்டுள்ள தகவல்களின்படி, 2017ல், 18 விதிமீறல் கட்டடங்களுக்கு சீல் வைக்கப்பட்டன. இந்த எண்ணிக்கை, 2018ல், ஏழாக குறைந்தது.




இவ்வகையில், நடப்பு ஆண்டில், ஜனவரி முதல், தற்போது வரை, ஒரு கட்டடத்துக்கு மட்டுமே அமலாக்கப்பிரிவு சீல் வைத்துள்ளது.நகரமைப்பு வல்லுனர்கள் கூறியதாவது:சட்ட ரீதியாக எவ்வித தடையும் இல்லாத நிலையில், சி.எம்.டி.ஏ., அமலாக்கப்பிரிவு அதிகாரிகள், விதிமீறல் கட்டடங்களுக்கு சீல் வைப்பதில், அலட்சியமாக உள்ளனர்.விதிமீறல் கட்டடங்கள் குறித்த புகார்களையும், அமலாக்கப்பிரிவு செயல்பாடுகளையும், உயரதிகாரிகள் ஆய்வு செய்தால், உண்மை நிலவரம் தெரியவரும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.



- நமது நிருபர் -

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X