| விதிகளை மீறும் ஆம்னி பஸ்கள் Dinamalar
விதிகளை மீறும் ஆம்னி பஸ்கள்
Advertisement
 

பதிவு செய்த நாள்

19 மே
2019
23:41

சென்னையில், போக்கு வரத்து விதிகளை மீறி இயக்கப்படும், தனியார் ஆம்னி பஸ்கள் மீது, அரசு நடவடிக்கை எடுக்காமல், அலட்சியம் காட்டி வருகிறது.



தமிழக அரசு விரைவு போக்குவரத்து கழகம், தொலைதுார பகுதிகளுக்கும், பிற மாநிலங்களுக்கும், பஸ்களை இயக்குகிறது. சென்னையின் போக்குவரத்து நெரிசலை குறைக்க, வெளியூர் பஸ்களுக்கான, பஸ் நிலையம் கோயம்பேடில் உள்ளது.அங்கிருந்து, வடபழனி நுாறடி சாலை, ஜி.எஸ்.டி., சாலை வழியாக, தென் மாவட்டங்களுக்கு, அரசு பஸ்கள் இயக்கப்பட்டன. மெட்ரோ ரயில் கட்டுமான பணியால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.இதனால், கோயம்பேடில் இருந்து, மதுரவாயல் புறவழிச் சாலை - பெருங்களத்துார் வழியாக, வெளியூர் பஸ்கள் இயக்கப்படுகின்றன.சென்னையில், பயணியரை ஏற்றி செல்ல முடியாத நிலையால், அரசு பஸ்கள், வருவாய் இழப்பை சந்தித்து வருகின்றன.




அதே சமயம், எழும்பூர் ரயில் நிலையம், கோயம்பேடு பஸ் நிலையம், வடபழனி, அசோக் பில்லர், காசி தியேட்டர், ஈக்காட்டுத்தாங்கல் என, சென்னையில், மக்கள் அதிகம் கூடும், 10க்கும் மேற்பட்ட இடங்களில், தனியார் ஆம்னி பஸ்கள் நிறுத்தப்பட்டு, பயணியர் ஏற்றப்படுகின்றனர். இதை, போக்குவரத்து போலீசார் கண்டுகொள்வதில்லை.இதற்கு, அந்த பஸ்களின் உரிமையாளர்களாக, அரசியல்வாதிகள், அதிகாரிகளின் உறவினர்கள் இருப்பதே, முக்கிய காரணம்.அதேசமயம், அரசு பஸ்கள், சென்னைக்குள் சென்றால், அதிகாரிகளிடம் தெரிவித்து, ஓட்டுனருக்கு, 'மெமோ' வழங்குவது உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.



- நமது நிருபர் -

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X