| சேதமடைந்த புயல் காப்பகங்களை சீரமைக்க நடவடிக்கை தேவை Dinamalar
சேதமடைந்த புயல் காப்பகங்களை சீரமைக்க நடவடிக்கை தேவை
Advertisement
 

பதிவு செய்த நாள்

19 மே
2019
23:44

ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டத்தில் கடலோர பகுதிகளில் 23க்கு மேற்பட்ட புயல்காப்பகங்கள் செயல்படுகின்றன. இதில் பல புயல்காப்பகங்கள் சேதமடைந்து அபாய நிலையில் உள்ளதால் அவற்றை சீரமைக்க வேண்டும்.சுனாமி, புயல் உள்ளிட்ட இயற்கை சீற்றங்களின் போது கடலோர பகுதிகளில் வசிக்கும் மீனவர்கள், பொதுமக்களை பாதுகாப்பாக தங்கவைக்க புயல்காப்பகங்கள் அரசு சார்பில் கட்டப்பட்டுள்ளது. தற்போது ராமநாதபுரம் மாவட்டத்தில் ரெட்டையூரணி, ரோச்மாநகர், முத்துப்பேட்டை, மாரியூர், சின்ன ஏர்வாடி, ராமேஸ்வரம், சோலியக்குடி உள்ளிட்ட 23க்கு மேற்பட்ட இடங்களில் புயல் காப்பகங்கள் செயல்பட்டு வருகிறது.



இந்த புயல் காப்பகங்களில் களிமண்குண்டு, எஸ்.பி., பட்டினம், தேவிப்பட்டினம் உள்ளிட்ட பல இடங்களில் புயல் காப்பகங்கள் சேதமடைந்து ஆபத்தான முறையில் காட்சியளிக்கின்றது. களிமண்குண்டு பகுதியில் உள்ள புயல்காப்பகம் 1987ல் கட்டப்பட்டது. தற்போது 5 ஆண்டுகளாக பராமரிப்பின்றி கட்டடம் இடிந்துவிழும் நிலையில் உள்ளது. இதன் அருகில் அரசு தொடக்கப்பள்ளி கட்டடம், கோயில் உள்ளதால், சேதமடைந்த புயல்காப்பகத்தை அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

 

Advertisement
மேலும் ராமநாதபுரம் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X