| மண் வளம் பாதுகாக்க பரிசோதனை அவசியம் Dinamalar
மண் வளம் பாதுகாக்க பரிசோதனை அவசியம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

19 மே
2019
23:45

பரமக்குடி : மண்ணில் உள்ள பிரச்னைகளை அறிந்து அதில் உள்ள தழை, மணி, சாம்பல் சத்துக்கள் மற்றும் நுண்ணுாட்டச்சத்துகளின் அளவை அறிந்திடவும், பயிர்களின் தேவைக்கேற்ப உரமிட்டு, செலவை குறைத்திடவும் பயிர் விதைப்பிற்கு முன் மண் பரிசோதனை அவசியம் செய்ய வேண்டும். கோடையில் மண் இறுகியும், மழைக்காலத்தில் குழைந்தும் இருப்பதால் மண் காற்றோட்டம் குறைந்து சத்துகளை உறிஞ்சும் தன்மை போன்றவை பாதிக்கப்படும்.



மேலும் தேவைக்கேற்ப உரமிடுவதற்கும் இப்பரிசோதனைகள் உபயோகமாக இருக்கும்.ஆகவே மண் பரிசோதனை மூலம் தகுந்த நிர்வாக உத்திகள் மற்றும் பயிர்களின் தேவைக்கேற்பவும், மண்ணின் தன்மைகேற்பவும் சமச்சீர் உரப்பரிந்துரை ஆகியவைகளை உள்ளடக்கிய மண் வள அட்டைகள் பரமக்குடி மண் மற்றும் நடமாடும் மண் பரிசோதனை நிலையத்தில் வழங்கப்படுகிறது,என்றார்.

 

Advertisement
மேலும் ராமநாதபுரம் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X