| பின்னலாடை நிறுவனங்களில் பணி; வெளிமாவட்டங்களில் 'சர்வே' Dinamalar
பின்னலாடை நிறுவனங்களில் பணி; வெளிமாவட்டங்களில் 'சர்வே'
Advertisement
 

பதிவு செய்த நாள்

19 மே
2019
23:47

திருப்பூர் : திருப்பூரில் பணிபுரிய விரும்புவோரை கண்டறிய, வெளி மாவட்டங்களில் 'சர்வே' நடத்தப்பட்டு வருகிறது.



திருப்பூர் பின்னலாடை துறையில் தொழிலாளர் பற்றாக்குறையை போக்க, ஸ்ரீபுரம் அறக்கட்டளை மற்றும் பொதிகை அமைப்பு இணைந்து 'ஒளி விளக்கு' திட்டத்தை செயல்படுத்துகின்றன.இத்திட்டத்தின் கீழ் நடத்தப்பட்ட ஆய்வில், மாநிலம் முழுக்க, 40 லட்சம் தொழிலாளர்கள், பனியன் நிறுவனங்களில் பணிபுரியும் திறனுடன் உள்ளனர் என்பது, தெரிய வந்துள்ளது.மற்ற பணியிடங்களைவிட, திருப்பூருக்கு அதிகளவு டெய்லர்கள் தேவைப்படுகின்றனர். எனவே, வேலைவாய்ப்பு குறைந்த மாவட்டங்களில், தையல் பயிற்சி மையங்கள் உருவாக்கி, தகுதியுள்ள தொழிலாளருக்கு பயிற்சியளித்து, அவர்களை திருப்பூர் நிறுவனங்களில் பணியமர்த்தும் முயற்சி நடந்து வருகிறது.முதல் கட்டமாக திருவாரூர், திருநெல்வேலி, மதுரை, சிவகங்கை மாவட்டங்களில், 12 பயிற்சி மையங்கள் உருவாக்கப்பட உள்ளது. ஒவ்வொரு மையத்துக்கு உட்பட்ட பகுதிகளிலும், திருப்பூர் நிறுவனங்களில் பணிபுரிய விருப்பமுள்ளோர் விவரங்களை அறிய, 'சர்வே' துவங்கியுள்ளது; இதற்காக, திருப்பூர் பின்னலாடை சார்ந்த, 18 வினா அடங்கிய படிவம் தயாரிக்கப்பட்டுள்ளது. அவர்கள் அளிக்கும் பதில் அடிப்படையில், தேர்வு செய்யப்பட்டு, அருகில் உள்ள பயிற்சி மையத்தில் பயிற்சி பெறச்செய்து, திருப்பூர் நிறுவனங்களில் பணியமர்த்தப்படுகின்றனர்.'ஒளி விளக்கு' திட்ட ஒருங்கிணைப்பாளர் சுந்தரேஷன் கூறுகையில், ''தகுதியுள்ளோரை தேர்வு செய்து பயிற்சியளிப்பது மிக முக்கியம்; பயிற்சிக்குப்பின், திருப்பூரில் பணிபுரிய மறுத்தாலோ அல்லது குறுகிய காலம் பணிபுரிந்துவிட்டு, அவர்கள் விடுபட்டாலோ, முயற்சி வீணாகும்; இதை உணர்ந்து கொள்ளவே சர்வே நடத்துகிறோம்.நீண்ட காலம் திருப்பூரில் பணிபுரிவோரை அடையாளம் கண்டு, அவர்களுக்கு பயிற்சி வழங்குகிறோம். நிரந்தரமாக பணிபுரியும், திறன்மிக்க தொழிலாளர்களால், பின்னலாடை நிறுவனங்கள் பலம் பெறும்,'' என்றார்.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X